தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச பாடப்புத்தகம் வினியோகம் துவக்கம்

இலவச பாடப்புத்தகம் வினியோகம் துவக்கம்

இலவச பாடப்புத்தகம் வினியோகம் துவக்கம்


UPDATED : ஜூன் 21, 2021 12:00 AM

ADDED : ஜூன் 21, 2021 07:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2021 12:00 AM ADDED : ஜூன் 21, 2021 07:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு பள்ளி மாணவர்களுக்கு, 292 கோடி ரூபாய் மதிப்பில், இலவச புத்தகம்வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, புதிய கல்வி ஆண்டிற்கான வகுப்புகளை, ஆன்லைன் மற்றும் கல்வி, &'டிவி&'யில் துவக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
நலம் விசாரிப்பு

இந்த வகுப்பில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, இலவச புத்தகங்கள் வழங்கும் பணி நேற்று துவங்கியது. சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, மாணவ - மாணவியருக்கு புத்தகங்களை வழங்கினார். அதேபோல, கல்வி, &'டிவி&'யில் புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகளையும் துவக்கி வைத்தார். கல்வி, &'டிவி&'யின் நிகழ்ச்சிகள் மற்றும் அதன் விபரங்களை, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் முதல்வருக்கு விளக்கினார்.பின், அங்கு வந்திருந்த மாணவ - மாணவியரிடம் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார். அவர்களுக்கு, பேனா மற்றும் சாக்லேட்டுகளை வழங்கி வாழ்த்தினார்.

தரமாக உள்ளதா?

மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம், தமிழக பாட திட்டங்கள் எளிதாக உள்ளதா, தரமாக உள்ளதா எனக் கேட்டார். அதற்கு, பாடத்திட்டம் நன்றாக உள்ளதாக அவர்கள் கூறினர். இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், பள்ளிக்கல்வி முதன்மை செயலர் உஷா, கமிஷனர் நந்தகுமார், இயக்குனர்கள் நாகராஜ முருகன், உஷாராணி, பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவ - மாணவியருக்கு, 292 கோடி ரூபாய் செலவில் பாட புத்தகங்கள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us