UPDATED : ஜூன் 21, 2021 12:00 AM
ADDED : ஜூன் 21, 2021 07:22 PM
தொலைதுார கல்வி வாயிலாக, சட்டப்படிப்புக்கு விண்ணப்பங்களை வரவேற்று, அண்ணாமலை பல்கலை தரப்பில் அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில், திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தொலைதுார கல்வி வாயிலாக, சட்டப்படிப்பு நடத்த தடை விதித்தது.
இவ்வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப்பானர்ஜி அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்தது. பார் கவுன்சில் சார்பில், வழக்கறிஞர் ரகுநாதன் ஆஜராகி, &'&'தொலைதுார கல்வி வாயிலாக, சட்டப்படிப்பு நடத்த முடியாது; சட்டக் கல்வியை ஒழுங்குபடுத்தும் அதிகாரம், பார் கவுன்சிலுக்கு உள்ளது,&'&' என்றார். இந்தியா முழுதும், 1,600 சட்டக் கல்லுாரிகள் இயங்குவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, &'ஆண்டுதோறும், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், சட்டப்படிப்பு முடித்து வெளியே வருகின்றனர். &'சட்டக் கல்வியின் தரம் எப்படி உள்ளது; கல்லுாரிகளில் போதிய, தகுதியான ஆசிரியர்கள் இருக்கின்றனரா&' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இவ்வழக்கில், பல்கலை மானியக்குழு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, மூன்று வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். ஏற்கனவே விதித்த தடையை நீட்டித்தும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
