UPDATED : ஜூன் 24, 2021 12:00 AM
ADDED : ஜூன் 24, 2021 08:15 AM
அ நிறம் | அளவு
வடமதுரை:
&'அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு &'ஆன் லைன்&' வகுப்புகள் நடத்த வேண்டும்&' என, முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம் வலியுறுத்தினார்.
வடமதுரையில் அவர் கூறியது:
கொரோனா பிரச்னையால் நடப்பு கல்வியாண்டிலும் பள்ளிகள் திறப்பு சாத்தியம் இல்லாமல் உள்ளது. தனியார் மற்றும் உதவி பெறும் பள்ளிகள் முழுவீச்சில் ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்றன. அரசு பள்ளிகளோ கல்வி தொலைக்காட்சியை மட்டுமே நம்பியுள்ளன. இதனால் மாணவரிடையே 2ம் ஆண்டாக கற்றலில் ஏற்றத்தாழ்வு தொடர்கிறது.
கல்வித் தொலைக்காட்சி கற்பித்தல் மூலம் கற்றல் நிகழ்கிறா என்பதை ஆசிரியர்களால் பரிசோதிக்க முடியவில்லை. எனவே அரசு பள்ளி மாணவருக்கும் ஆன்லைன் வகுப்புகளை நடத்த கட்டமைப்புகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
