தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாற்று மருத்துவ படிப்புகளும் ஏராளம்

மாற்று மருத்துவ படிப்புகளும் ஏராளம்

மாற்று மருத்துவ படிப்புகளும் ஏராளம்


UPDATED : ஜூன் 26, 2021 12:00 AM

ADDED : ஜூன் 26, 2021 07:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 26, 2021 12:00 AM ADDED : ஜூன் 26, 2021 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 பிரிவில் பயாலஜி படித்த மாணவர்கள் எப்போதும், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., தேர்வுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். இதில் வாய்ப்புகள் கிடைக்காத மாணவர்களுக்கு, இதற்கு இணையான படிப்புகள் ஏராளமாக உள்ளன, என, கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.

மருத்துவத்துக்கு இணையான மாற்று படிப்புகளை தேர்வு செய்வது குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது:

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கிடைக்காத மாணவர்கள், கால்நடை மருத்துவ படிப்பை தேர்வு செய்யலாம். இதில், அதிக வாய்ப்புகள் உள்ளன. கடந்த காலங்களில் இரண்டு மாவட்டங்களில் மட்டுமே கல்லுாரிகள் இருந்தன. தற்போது, ஐந்து மாவட்டங்களில் புதிதாக துவங்கியுள்ளனர். செல்ல பிராணிகள் வளர்ப்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். இதனால் அரசு, தனியார் மட்டுமின்றி சுயமாகவும் கிளீனிக் வைத்துக்கொள்ள இயலும். 
அடுத்தகட்டமாக, பி.என்.ஒய்.எஸ்.,(நேச்சரோபதி) படிப்பை தேர்வு செய்யலாம். கொரோனாவுக்கு பிறகு இதற்கான மவுசு அதிகரிக்கிறது. இதற்கு, &'நீட்&' தேவையில்லை. இயற்பியல், பயாலஜி, வேதியியல் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வில் சேர்க்கை வழங்கப்படுகிறது. இவர்களும் டாக்டர் என்றே அழைக்கப்படுகின்றனர். 
சித்தா, ஆயுர்வேதிக், யுனானி, ஹோமியோபதி ஆகிய இந்திய மருத்துவ படிப்புகளை தேர்வு செய்யலாம். இதற்கு கட்டாயம் &'நீட்&' தேவை. அரசு வேலைவாய்ப்பு கட்டாயம் உள்ளது; சுயமாகவும் தொழில் துவங்கலாம். தமிழ் வழியில் கற்றுத்தரப்படுவதால், பிளஸ் 2 வரை தமிழ் ஒரு பாடமாக படித்து இருக்கவேண்டும். மேற்படிப்புக்கும் வாய்ப்பு உள்ளது. 

பாராமெடிக்கல், அலைடு படிப்புகள்

பி.பார்ம்., பி.எஸ்சி., நர்சிங், பிசியோதெரபி, பி.பி.டி., பி.ஏ.எஸ்.எல்.பி., ஆகிய பாராமெடிக்கல் படிப்புகளை தேர்வு செய்யலாம். அல்லது, மருத்துவர்களுக்கு உதவும் வகையில், டெக்னிக்கல் சார்ந்த, பி.எஸ்சி.,ரேடியாலஜி, ரேடியோ தெரப்பி டெக்னாலஜி, பி.எஸ்சி., கார்டியாலஜி, ஆப்தோமாலஜி படிப்புகளை தேர்வு செய்து படிக்கலாம். மருத்துவர்களை விட குறைந்த ஊதியம் என்ற எண்ணம் தேவையில்லை. 
உரிய தொழில்நுட்பங்களை முறையாக கற்று திறமைகளை மேம்படுத்திக்கொண்டால், நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கிடைக்கும். பிளஸ் 2 பிரிவில் பயாலஜி படித்த மாணவர்கள் எப்போதும், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., தேர்வுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். &'நீட்&' பொறுத்தவரை நடப்பாண்டில் நடப்பதற்கே அதிக வாய்ப்பு உள்ளது. 
&'நீட்&' தேர்வு கைகொடுக்கவில்லை எனில் மாணவர்கள் மனம் தளராமல் அடுத்தகட்ட படிப்புகளை தேர்வு செய்யவேண்டும். எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., தாண்டி பல வாய்ப்புகள் உள்ளன. எந்த மருத்துவப்படிப்பு படித்தாலும், அதில் மேற்படிப்பு படித்து நிபுணத்துவம் பெறுவது சிறப்பான எதிர்காலத்தை தரும். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us