தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச எல்.கே.ஜி., அட்மிஷன் துவக்கம்

இலவச எல்.கே.ஜி., அட்மிஷன் துவக்கம்

இலவச எல்.கே.ஜி., அட்மிஷன் துவக்கம்


UPDATED : ஜூலை 09, 2021 12:00 AM

ADDED : ஜூலை 09, 2021 08:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2021 12:00 AM ADDED : ஜூலை 09, 2021 08:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
இலவச எல்.கே.ஜி., அட்மிஷன் திட்டத்தின் கீழ், கோவையில், 380 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 14 வயதுக்குட்பட்டோர், அடிப்படை கல்வி பெற வேண்டியது அவசியம். பொருளாதாரத்தில் பின்தங்கியோர், தங்களின் குழந்தைகளை, 25 சதவீத இடஒதுக்கீட்டின் படி, தனியார் பள்ளிகளில் இலவசமாக சேர்க்கலாம். தொடக்க வகுப்புகளில், சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில், மொத்தமுள்ள இடங்களில், 25 சதவீத இடங்கள் இதற்கு ஒதுக்கப்படுகிறது. 
இம்மாணவர்களுக்கு, அரசே கல்வி கட்டணத்தை செலுத்தும்.இதற்கு, (http://rtetnschools.gov.in) என்ற இணையதளத்தில், ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 
குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் ஆதார், ரேஷன் கார்டு, வருமான, ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும். வரும் ஆக., 3ம் தேதி வரை, விண்ணப்பிக்க அவகாசம் உண்டு. ஒரு மாணவர், தனது குடியிருப்பை சுற்றியுள்ள ஐந்து பள்ளிகள் வரை சேர்க்கை புரிவதற்கு விண்ணப்பிக்கலாம். 
அதிக விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில், குலுக்கல் முறையில் சேர்க்கை உறுதி செய்யப்படும்.
இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறுகையில், &'&'கோவை மாவட்டத்தில் இத்திட்டத்திற்கு, சிறுபான்மை அல்லாத, 380 தனியார் பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். பள்ளிகளின் பட்டியல் கல்வி இணையதளத்தில் உள்ளது. வட்டார, கல்வி மாவட்ட, முதன்மை கல்வி அலுவலகத்தில், ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் கொண்டு வந்து பெற்றோர் விண்ணப்பிக்கலாம்,&'&' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us