தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/துணைவேந்தர் நியமனம் ராமதாஸ் கோரிக்கை

துணைவேந்தர் நியமனம் ராமதாஸ் கோரிக்கை

துணைவேந்தர் நியமனம் ராமதாஸ் கோரிக்கை


UPDATED : ஜூலை 19, 2021 12:00 AM

ADDED : ஜூலை 19, 2021 11:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2021 12:00 AM ADDED : ஜூலை 19, 2021 11:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
துணைவேந்தர்களாக, துறை சார்ந்த பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:

தமிழகத்தில் ௧௦ ஆண்டுகளுக்கு முன் அனைத்து பல்கலைகளுக்கும் தொலைநோக்கு பார்வை உடைய கல்வியாளர்கள் தான் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டனர். ஏ.எல்.முதலியார், நெ.து.சுந்தரவடிவேலு, மால்கம் ஆதிசேஷய்யா போன்றவர்கள் பல்வேறு கல்வி பின்புலங்களில் இருந்து வந்தவர்கள். அவர்கள் அனைவருக்கும் கல்வி வளர்ச்சி சார்ந்த தொலைநோக்குப் பார்வை இருந்ததால் தான், தாங்கள் வகித்த துணைவேந்தர் பதவிகளுக்கு பெருமை சேர்த்தனர். இன்றும் அவர்கள் கொண்டாடப்படுகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக கலை, அறிவியல் சார்ந்த பல்கலைகளுக்கு அத்துறைகளை சேர்ந்த பேராசிரியர்களை நியமிக்காமல் பொறியியல் வேளாண்மை உள்ளிட்ட சிறப்பு படிப்புகளை பயின்ற பேராசிரியர்கள் துணை வேந்தர்களாக நியமிக்கப்படுகின்றனர். இது மிகவும் தவறான அணுகுமுறை.
தமிழகத்தில் மொத்தமுள்ள 21 பல்கலைகளில், 11 கலை மற்றும் அறிவியல் பல்கலைகளாக உள்ளன. அவற்றின் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் கலை மற்றும் அறிவியல் பேராசிரியர்களை மட்டும் துணை வேந்தர்களாக நியமிக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் விதிகளில் திருத்தம் செய்ய தமிழக அரசும், கவர்னரும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us