தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயர்கல்வித் துறையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை!

உயர்கல்வித் துறையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை!

உயர்கல்வித் துறையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை!


UPDATED : நவ 17, 2009 12:00 AM

ADDED : நவ 17, 2009 01:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2009 12:00 AM ADDED : நவ 17, 2009 01:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்த கடும் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதைப் போக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம், விரைவில் நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளது. இப்போது, ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வித் துறைகளில் மாணவர்களின் சேர்க்கை 7 லிருந்து 8 சதவீதமாக இருக்கிறது. 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் இறுதியில், இதை 16 சதவீதமாக்கவும், 2016-17ல்
30 சதவீதமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


அதற்கேற்ப, உயர்கல்வித் துறைகளில் ஆசிரியர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று அத்துறை நிபுணர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்தப் பிரச்னையை மனதில் கொண்டு, ஆசிரியர் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஒரு குழு அமைக்கத் திட்டமிட்டுள்ளது.


உயர்கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள இந்தப் பாதிப்புக்கு, ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் கல்லூரி பல்கலைகளில் குறைவான சம்பள விகிதம் இவைதான் காரணம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். வெறும் சம்பளப் பிரச்னை மட்டுமல்லாது, ஆசிரியப் பணியின் மீது உள்ள மதிப்பும் ஒரு காரணம் என்கிறது மற்றொரு தரப்பு.


தேவை அதற்கேற்ப உற்பத்தி என்ற பழைய கோட்பாடு இப்பிரச்னையில் பொருந்தாது. வரையறை இருப்பதால் சம்பளம் அதிகமாக இல்லை. வரையறையில்லாத துறைகளில் சம்பளம் அதிகமாக இருக்கலாம், ஆனால் கட்டுப்பாடு இருக்காது. இவற்றைத் தாண்டி இப்பிரச்னைக்கான தீர்வைக் காண வேண்டும் என்கிறது அந்தத் தரப்பு.


எது எப்படியிருப்பினும், மாணவர் சேர்க்கை அதிகரிக்கக் கூடிய காலத்தில் தலைதூக்கியுள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறைப் பிரச்னைக்கு விரைவில் முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us