முதல்வரின் படைப்புக்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு
முதல்வரின் படைப்புக்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு
UPDATED : நவ 17, 2009 12:00 AM
ADDED : நவ 17, 2009 05:48 PM
டிசம்பர் இறுதியில் சென்னையில் நடைபெறவுள்ள விழாவில், ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் இப்புத்தகங்களை வெளியிடுகிறார்.
தமிழக முதல்வர் கருணாநிதியின் படைப்புகள் தற்போது தமிழில் மட்டுமே உள்ளன. இந்நூல்களை அனைவரையும் வாசிக்க செய்யவும், நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யவும், இவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் பொறுப்பை பாரதியார் பல்கைலயின் முன்னாள் துணைவேந்தர் திருவாசகம் செய்து வந்தார்.
இதற்கென பல்கலையில் சிறப்பு கமிட்டி ஏற்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இதில் ‘தொல்காப்பிய பூங்கா’ எனும் நூலின் பெயர்ப்பு பணிகளை முன்னாள் துணைவேந்தர் திருவாசகம் செய்து வந்தார். இதனிடையே அவரது பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, சென்னை பல்கலை துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது மொழி பெயர்ப்பு பணிகள் நிறைவு பெற்று விட்டதால் டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் இவற்றை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. தொல்காப்பிய பூங்கா, கவிதை மழை(மூன்று தொகுதிகள்), சங்கத் தமிழ், பொன்னர் சங்கர், தென்பாண்டிச் சிங்கம், அனார்க்கலி(ஓரங்க நாடகம்), பாயும்புலி பண்டாரவன்னியன், உரைநடைகள், பராசக்தி, மனோகரா, சிறுகதைகள் ஆகிய 12 புத்தகங்கள் வெளியிடப்படவுள்ளன. சென்னை பல்கலை ஆடிட்டோரியத்தில் நடைபெறவுள்ள இவ்விழாவில், ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நூல்களை வெளியிடவுள்ளார். இத்தகவலை, பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் தெரிவித்தார்.
