UPDATED : நவ 25, 2009 12:00 AM
ADDED : நவ 25, 2009 01:20 PM
அ நிறம் | அளவு
சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக சுகாதாரத் துறையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்படும் மருத்துவ அலுவலர் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன.
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 110 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 75 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றுக்கான மருத்துவ அலுவலர் பணியிடங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் பெறப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களை நிரப்ப நாளை, எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் பயிற்சி நிலையத்தில், நவம்பர் 26ம் தேதி காலை 10 மணி முதல் கவுன்சிலிங் நடக்க உள்ளது. தேர்வு செய்யப்படுவோருக்கு அன்று மாலையே பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.
