தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மெட்ரிக் மாணவர்களுக்காக ஜெயித்துக் காட்டுவோம்!

மெட்ரிக் மாணவர்களுக்காக ஜெயித்துக் காட்டுவோம்!

மெட்ரிக் மாணவர்களுக்காக ஜெயித்துக் காட்டுவோம்!


UPDATED : நவ 30, 2009 12:00 AM

ADDED : நவ 30, 2009 11:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2009 12:00 AM ADDED : நவ 30, 2009 11:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்த வகையில், பத்தாம் வகுப்பு மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான, ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில், கலந்து கொள்ள காலை மூன்று மணி முதலே குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வத்துடன் குவிந்தனர். ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், கலந்து கொண்டு தேர்விலும், வாழ்விலும் ஜெயிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

குறிப்பாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். காலை 7.30 மணிக்கு, மாணவர்கள் நிகழ்ச்சி அரங்கினுள் வரிசையாக அமர வைக்கப்பட்டனர். எட்டு மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. அரங்கினுள் இடம் இல்லாததால், மாணவர்கள் படிக்கட்டிலும், மேடையின் மீதும் அமர வைக்கப் பட்டனர்.

பெற்றோர்கள் வெளியில் வைக்கப்பட்டிருந்த திரையை பார்த்து, தங்கள் குழந்தைகளுக்காக குறிப்பெடுத்தனர். கல்வியாளர் ரமேஷ் பிரபா, பேராசிரியை பர்வீன் சுல்தானா, செயின்ட் ஜான்ஸ் கல்விக் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் கிஷோர் குமார் உள்ளிட்டோர் கல்வியின் முக்கியத்துவம், தேர்வை எதிர் கொள்ளும் வழிமுறைகளை வழங்கினர்.

கலந்து கொண்ட மாணவர் களுக்கு, தேர்வில் வரும் முக்கிய வினாக்கள், புளூ பிரின்ட் புத்தகம், தேர்வு நேரத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த கையேடு வழங்கப்பட்டது. எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி ஆசிரியர்கள் சுதர்சனம் (கணிதம் 1 மற்றும் 2), மயிலின் செல்வகுமார் (அறிவியல் 1), சாந்தி பிரபுராம் (அறிவியல் 2), லலிதா சுப்பிரமணியன்(ஆங்கிலம்), ரஜினி பால் (வரலாறு மற்றும் குடிமையியல்), சுந்தரராமன்(தமிழ்). சுரேஷ் குமார் (புவியியல் மற்றும் பொருளியல்) ஆகியோர் பங்கேற்று தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது குறித்து விளக்கி கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us