தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்திய பல்கலை.களுக்கு ஆஸ்திரேலியா அழைப்பு

இந்திய பல்கலை.களுக்கு ஆஸ்திரேலியா அழைப்பு

இந்திய பல்கலை.களுக்கு ஆஸ்திரேலியா அழைப்பு


UPDATED : டிச 05, 2009 12:00 AM

ADDED : டிச 05, 2009 03:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 05, 2009 12:00 AM ADDED : டிச 05, 2009 03:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆஸ்ரேலியாவில் அடிலெய்ட் நகரத்தை பல்கலைக்கழக நகரமாக்கத் திட்டமிட்டுள்ளோம்.  இந்தியாவில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள் தங்களது வளாகங்களை அடிலெய்டில் அமைக்கும்படி அழைப்பு விடுத்துள்ளோம் என்று தெற்கு ஆஸ்திரேலிய வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அமைச்சர் மைக்கேல் ஓ பிரைன் தெரிவித்தார்.


வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் விவகார அமைச்சர் வயலார் ரவியைப் பார்த்து பேசிய மைக்கேல் ஓ பிரைன் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் உள்ள முக்கியக் கல்வி நிறுவனமான லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரி தனது வளாகத்தை அடிலெய்டில் தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள காப்ளான் பல்கலைக்கழகமும் வளாகத்தை விரைவில் தொடங்க உள்ளது. இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு இடம் அளிக்க அடிலெய்ட் நகரம் தயாராக இருக்கிறது. இது தொடர்பாக சில இந்தியக் கல்வி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.


ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்கள் தொடங்குவது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த மைக்கேல் ஓ பிரைன், கூட்டு முயற்சியில் படிப்புகளை நடத்த ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டுள்ளன. அதையடுத்த நிலையில்தான், இந்தியாவில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களின் வளாகங்கள் குறித்து சிந்திக்க முடியும் என்றார்.


இந்திய மாணவர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்து விளக்கமளித்த  அவர், தெற்கு ஆஸ்திரேலியா மாணவர்களுக்குப் பாதுகாப்பானது.இந்திய மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை குறையவில்லை. பன்முக கலாசாரமும் சகிப்புத் தன்மையும் கொண்ட நாடு ஆஸ்திரேலியா. அங்கு இந்திய மாணவர்கள் மீது நடந்த தாக்குதல்களை இனவாத தாக்குதல்களாகக் கருத முடியாது என்றார்.


ஆஸ்திரேலியாவில் 5 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர். அதில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 94,000. சீனர்களுக்கு அடுத்தபடியாக இந்திய மாணவர்கள்தான் அதிக அளவில் அங்கு படிக்கிறார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us