தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கிராமிய மேம்பாட்டை அடிப்படையாககொண்ட பட்டப்படிப்புகள்

கிராமிய மேம்பாட்டை அடிப்படையாககொண்ட பட்டப்படிப்புகள்

கிராமிய மேம்பாட்டை அடிப்படையாககொண்ட பட்டப்படிப்புகள்


UPDATED : டிச 23, 2009 12:00 AM

ADDED : டிச 23, 2009 02:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 23, 2009 12:00 AM ADDED : டிச 23, 2009 02:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காந்தி கிராம பல்கலை 27வது பட்டமளிப்பு விழா நடந்தது. தலைமை வகித்து துணைவேந்தர் ராமசாமி பேசியதாவது: பல்வேறு நிலைகளில், நாடு விரைவான வளர்ச்சி கண்டு வருகிறது. வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப, கிராமத்தினரை நிலையான ஆற்றல்படுத்தும் வகையில், பல்வேறு பாடத்திட்டங்களை, காந்திகிராம பல்கலை வழங்குகிறது.


இவற்றில் பட்டய படிப்புகள் முதல், பட்டம் ஆராய்ச்சி உள்ளிட்ட உயர் படிப்புகள் வரை அனைத்து படிப்புகளும் கிராமிய மேம்பாட்டை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் மேலும், 10 புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு தலைமுறைகளாக இங்கு 400 பேர் ஆராய்ச்சி படிப்பு முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர்.தற்போது 27 பேர் டாக்டர் பட்டம் பெறுகின்றனர்.
 
தொலைநோக்கு பார்வையுடன் கிராமிய வளர்ச்சிக்கான, புதிய திட்டங்களும் செயலாக்கப்படவுள்ளன, என்றார். 898 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.பதிவாளர் பிரபாகரன், புல தலைவர்கள் குபேந்திரன், வில்லியம் பாஸ்கரன், நாகராஜன், சிண்டிகேட் உறுப்பினர்கள் ஆனந்தகுமார், சேதுராமன், சித்தன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us