UPDATED : டிச 23, 2009 12:00 AM
ADDED : டிச 23, 2009 02:37 PM
அ நிறம் | அளவு
கல்லூரி மாணவர்களுக்கு, சுவாமி விவேகானந்தர் விருது வழங்கப்படுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு, மேற்கண்ட விருதுகள் அந்தந்த மாவட்டங்களில் வழங்கப்படும். எனவே இசை, படிப்பு, ஓவியம், விளையாட்டு, கவிதை, பேச்சு, பரதநாட்டியம், சமூகப்பணிகளில் பெற்ற சான்று நகலுடன், மாணவர்கள் 20 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தை, நிறுவனர், பாரதி யுவகேந்திரா, ஜி28, சாந்திசதன் குடியிருப்பு, கோச்சடை, மதுரை-16 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதுதொடர்பாக, 94439-30815, 94426- 30815 ல் விவரம் அறியலாம். மேலும், கடந்த பொதுத்தேர்வுகளில், 80 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற, மாணவர்களும் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம் என நிறுவனர் நெல்லை பாலு தெரிவித்துள்ளார்.
