தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜெர்மன் பேராசிரியைக்கு ராமானுஜன் விருது!

ஜெர்மன் பேராசிரியைக்கு ராமானுஜன் விருது!

ஜெர்மன் பேராசிரியைக்கு ராமானுஜன் விருது!


UPDATED : டிச 23, 2009 12:00 AM

ADDED : டிச 23, 2009 04:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 23, 2009 12:00 AM ADDED : டிச 23, 2009 04:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு


கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலை சீனிவாச ராமானுஜன் மையம் சார்பில் ஆண்டு தோறும் கணித மேதை சீனிவாச ராமானுஜன் பிறந்த நாளை முன்னிட்டு உலக அளவில் கணிதத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதும், அமெரிக்க டாலரும் வழங்கப்படுகிறது.

அதன்படி, கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலை சீனிவாச ராமானுஜன் மையத்தில் நேற்று எண்கணிதம் மற்றும் சோதனை தீட்டா செயல்பாடுகள் என்ற தலைப்பில் ஏழாவது உலக கணித மாநாடு நடந்தது. சீனிவாச ராமானுஜனின் 122வது பிறந்த நாளை முன்னிட்டு இம்மாநாடு நடந்தது. கணித மாநாட்டை தேசிய அறிவியல் கழகத் தலைவரும், பெங்களூரு இந்திய அறிவியல் கழக உயிரி தொழில்நுட்பப் பேராசிரியருமான விஜயன் தொடங்கி வைத்தார்.
 
மாநாட்டுக்கு பல்கலை துணைவேந்தர் சேதுராமன் தலைமை வகித்தார். பல்கலை நிதிசார் ஆராய்ச்சி புலத்தலைவர் சுவாமிநாதன் வரவேற்றார். மாநாட்டில் 2009ம் ஆண்டுக்கான சாஸ்த்ரா சீனிவாச ராமானுஜன் விருதை, ராமானுஜன் பங்களிப்பு செய்த எண் கணித துறையில் ஆராய்ச்சிக்காக உலக அளவில் ஆய்வு மேற்கொண்டமைக்காக ஜெர்மன் நாட்டின் கலோன் பல்கலை பேராசிரியை காத்ரின் பிரிங்மேனுக்கு விருதும், பத்தாயிரம் அமெரிக்க டாலரும் வழங்கப்பட்டன. விருதையும், பாராட்டு பத்திரத்தையும் புளோரிடா பல்கலை கணித பேராசிரியரும், சீனிவாச ராமானுஜன் விருது கமிட்டி தலைவருமான கிருஷ்ணசாமிஅல்லாடி வழங்கினார்.
 
மாநாட்டில் சிறப்பு விருந்திருனராக பங்கேற்ற விஜயன் பேசியதாவது: நவீன விஞ்ஞானம் என்பது ஆங்கிலேய அரசால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். புவியியல், தொல்லியியல் போன்ற ஆய்வுத்துறைகள் ஆங்கிலேய அரசால் இந்தியாவில் நிறுவப்பட்டதால் இந்திய வளங்களை ஆய்வு செய்ய உதவியது.

இதைத்தொடர்ந்து இந்தியாவின் இரண்டாவது முன்னேற்றமாக ஐ.ஐ.டி., போன்ற தொழில் கல்விகள் ஏற்படுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் தான் அறிவியல், விஞ்ஞானிகள், தொழில்கள், கல்லூரிகள் ஆகியவை தோன்றின. கணித மேதை சீனிவாச ராமானுஜன் எந்த விஞ்ஞானிகளுக்கும் அப்பாற்பட்டவர்.

இவரைத் தொடர்ந்து பல விஞ்ஞானிகள் இந்தியாவில் உருவாகினர். விஞ்ஞானிகள் அதிகளவில் வந்ததால் ஏசியாட்டிக் சொசைட்டி உருவானது. நேரு காலத்தில் பல்வேறு நிலைகளில் ஆய்வகங்களும், விஞ்ஞானிகளும் உருவாகினர். பிற்காலத்தில் அவை குறைந்தது.

கடந்த 1960க்கு பின் இந்தியாவில் விஞ்ஞானத்தின் பங்களிப்பு மற்றும் முன்னேற்றம் அதிகமாக காணப்பட்டது. இதில், அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள், விவசாயிகள் மற்றும் பல துறைகளில் இருந்தவர்களுடைய ஒத்துழைப்பும் இருந்தது. அன்று ஏற்பட்ட முன்னேற்றம் இன்று சந்திராயன் வரை நாம் சென்றுள்ளோம்.

இதைத் தொடர்ந்து பயோடெக்னாலஜி, பார்மாசூட்டிக்கலிலும் நாம் நமது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறோம். முன்பெல்லாம் அறிவியல் ஆய்வுக்கு நிதி கிடைக்காது. தற்போது இந்தியாவில் ஆய்வுக்கு தாராளமாக நிதி கிடைக்கிறது.

இருந்தாலும், நாம் விஞ்ஞான வளர்ச்சியில் நாள்தோறும் வளர்ந்து வருகிறோம். நம்முடைய ஆலோசனைகளை உலக நாடுகளும் கேட்கும் அளவுக்கு நாம் வளர்ச்சி பெற்று வருகிறோம். இதை மேலும் மேலும் நாம் அதிகப்படுத்தி கொண்டு செல்ல வேண்டும். அதற்கு நமது தற்போதைய கல்வி முறையில் மாற்றம் தேவை. விஞ்ஞானம், அறிவியல் பூர்வ கல்விமுறையை மாணவர்களுக்கு கொண்டு வர வேண்டும். அப்போது தான் நாம் உலக நாடுகளோடு சமமாக போட்டியிட முடியும்.
 
இவ்வாறு அவர் பேசினார். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த கணித வல்லுனர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us