UPDATED : ஜூன் 17, 2023 12:00 AM
ADDED : ஜூன் 17, 2023 09:29 AM
பெருமாநல்லுார், ஈட்டிவீரம்பாளையம், வள்ளிபுரம், தொரவலுார் பகுதிகளை சேர்ந்த 1,100 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு ஆறாம் வகுப்பில் 61 மாணவிகளும், 9ம் வகுப்பில் 170 மாணவிகளும், பிளஸ் 1 வகுப்பில் 289 மாணவிகளும் புதிதாக சேர்ந்துள்ளனர். அதிக மாணவிகள் படித்து வரும் இப்பள்ளியில் போதிய வகுப்பறை மற்றும் ஆசிரியர்கள் இல்லை.வகுப்பறை பற்றாக்குறையால் பிளஸ் 1 வகுப்பில், ஒரு வகுப்பறையில் 80 மாணவிகள் வரை நெருக்கடியில் அமர்ந்து படித்து வருகின்றனர். அதுபோல் சில வகுப்புகளை சேர்ந்த மாணவிகளை மர நிழலில் அமர வைத்து பாடம் நடத்தப்படுகிறது. ஆறு முதல் 10ம் வகுப்பு வரை 14 ஆசிரியர் இருக்க வேண்டும் ஆனால் 10 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அதுபோல் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பிற்கு ஆறு ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளது.பெற்றோர் கூறுகையில், அதிக மாணவிகள் படித்து வரும் இப்பள்ளியில் போதிய வகுப்பறை இல்லை. இட வசதி உள்ளது. கூடுதல் வகுப்பறை கட்டி மாணவிகள் சிரமமின்றி படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் மாணவிகள் படிப்பு பாதிக்காத வகையில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும். பள்ளி அருகில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் தமிழ் நாடு கதர் கிராம தொழில் வாரியம் உள்ளது. பயன்பாடு இல்லாமல் பூட்டி கிடக்கிறது. வளாகம் முழுவதும் முட்புதர்கள் மண்டி உள்ளது. கல்வித்துறையினர், மக்கள் பிரதிநிதிகள் முயற்சித்தால், இங்குள்ள கட்டடங்களை வகுப்பறைகளாக தற்காலிகமாக பயன்படுத்த முடியும் என்றனர்.
