தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெரியபுராணத்தை கரைத்துக் குடித்த மாணவர்கள்

பெரியபுராணத்தை கரைத்துக் குடித்த மாணவர்கள்

பெரியபுராணத்தை கரைத்துக் குடித்த மாணவர்கள்


UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM

ADDED : ஜூன் 19, 2023 04:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM ADDED : ஜூன் 19, 2023 04:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

31ம் ஆண்டு கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லுாரி வளாகத்திலுள்ள சாவித்திரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டது. மாநிலம் முழுதும் இருந்து மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இவர்களுக்கு, பெரியபுராணத்தில் அடியார் புகழ் போற்றும் ஓர் அருட்தொடர், சேக்கிழார் பெருமானின் பன்முகப் பார்வை, பெரியபுராணம் ஒரு வரலாற்று ஆவணம் எனும் தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.இதில் பேசிய மாணவர்கள், நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றையும், அக்கால சமூக சூழலையும், இறைவன் முன் அனைவரும் சமம் என்பதற்கான உதாரணங்களையும் வரிசைப்படுத்தி பேசினர். மாணவர்கள் பெரியபுராணத்தை ஆழ்ந்து படித்ததை அறிந்த பார்வையாளர்கள், இந்த மாணவர்கள் பெரியபுராணத்தை கரைத்துக் குடித்துள்ளனர் என பாராட்டினர். மூன்று சுற்றுகளாக நடந்த இப்போட்டியில் சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ் கல்லுாரி மாணவர் அமர்நாத், மதுரை தியாகராயர் கல்லுாரி மாணவர் தனுஷ், நாமக்கல், காளிப்பட்டி மகேந்திரா கல்லுாரி மாணவர் ஹரிகரன் ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லுாரி மாணவி ஆசிகா, சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவர் அனய், கிருஷ்ணகிரி அண்ணா கல்லுாரி மாணவர் முரளிகிருஷ்ணன் ஆகியோர், ஆறுதல் பரிசு பெற்றனர். இவர்களுக்கு, அடுத்த மாதம் 28ம் தேதி, சென்னையில் நடக்க உள்ள விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. வெற்றி பெற்றவர்களை சேக்கிழார் ஆராய்ச்சி மைய செயலர் சிவாலயம் ஜெ.மோகன், துணை செயலர் ராஜாராமன் மற்றும் பேராசிரியர்கள் உலகநாயகி பழனி, கற்பகம், மா.கி.ரமணன், சாரதா நம்பி ஆரூரன், பிரேமா, வழக்கறிஞர் பால சீனிவாசன் ஆகியோர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us