தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சோழர்கள் இன்று: வாசகர்களிடம் வரவேற்பு

சோழர்கள் இன்று: வாசகர்களிடம் வரவேற்பு

சோழர்கள் இன்று: வாசகர்களிடம் வரவேற்பு


UPDATED : ஜூன் 22, 2023 12:00 AM

ADDED : ஜூன் 22, 2023 09:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 22, 2023 12:00 AM ADDED : ஜூன் 22, 2023 09:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாநிலத்தின் 2,500 ஆண்டுகள் வரலாற்றை எளிமையாக அறிமுகப்படுத்தும் சோழர்கள் இன்று நுால், வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நுாலை வாங்கி வாசித்த வாசகர்கள் 10, 20, 50 என அதிக எண்ணிக்கையில் நுாலை வாங்கி இளைய தலைமுறையினருக்கு பரிசளித்து வருகின்றனர். தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், தன்னுடைய பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் வழங்குவதற்காக, கணிசமான எண்ணிக்கையில் சோழர்கள் இன்று நுாலை வாங்க வழக்கறிஞரும், காங்., மாவட்டத் தலைவருமான சிவ.ராஜசேகரன், தினமலர் அலுவலகம் வந்தார். அவரிடம், தினமலர் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பிரதிகளை வழங்கினார்.இதுகுறித்து சிவ.ராஜசேகரன் கூறியதாவது:
மாணவர்கள் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நுாலாக இது வெளிவந்துள்ளது. தமிழகத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள நல்ல வழிகாட்டி. அதனால் தான் என்னால் இயன்ற அளவுக்கு இந்த நுாலை வாங்கி மாணவர்களுக்கு அளிக்கிறேன். இப்படி ஒரு நுாலை வெளிக்கொண்டுவந்த தினமலர் பணி பாராட்டுக்குரியது.இவ்வாறு அவர் கூறினார்.இந்த நுாலை வீட்டிலிருந்தபடியே வாசகர்கள் வாங்க, தினமலர் ஏற்பாடு செய்துள்ளது. 75500 09565 எண்ணுக்கு கூகுள் பே வழியாக 500 ரூபாய் செலுத்தி கூரியர் வழியே நுாலை பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us