UPDATED : ஜூன் 22, 2023 12:00 AM
ADDED : ஜூன் 22, 2023 11:35 AM
இந்தியாவில் ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களில், பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு ஜே.இ.இ., நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வு ஆண்டுதோறும் இரண்டு அமர்வுகளாக நடத்தப்படும். இத்தேர்வில் பங்கேற்பதற்காக நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 92 பேர் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் ஒரு மாதம் சிறப்பு பயிற்சியளிக்கப்பட்டது. தேர்வு எழுதியவர்களில் 23 பேர் வெற்றி பெற்றனர். அதில் ஒன்பது பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேவையான மதிப்பெண் பெறவில்லை. மீதமுள்ள 14 பேர் திருச்சி என்.ஐ.டி.,யில், பொறியியல் படிக்க விண்ணப்பித்து வருகின்றனர். அவர்களில் மாணவி இலக்கியா, மாணவர்கள் கவின்ராஜ், ஆகாஷ் ஆகியோர் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
