தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநிலத்தில் எழுத்தறிவு பணி ஆணையம்

மாநிலத்தில் எழுத்தறிவு பணி ஆணையம்

மாநிலத்தில் எழுத்தறிவு பணி ஆணையம்


UPDATED : ஜூன் 24, 2023 12:00 AM

ADDED : ஜூன் 24, 2023 09:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 24, 2023 12:00 AM ADDED : ஜூன் 24, 2023 09:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரியை 100 சதவீத எழுத்தறிவு மாநிலமாக மாற்ற புதிய ஆணையம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் ஆண்கள்-91.3 சதவீதம்; பெண்கள்-80.7 சதவீதம் என மொத்தம் 85.8 சதவீத பேர் கல்வி அறிவு உடையவர்களாக உள்ளனர். பிராந்திய ரீதியாக புதுச்சேரி -85.4; காரைக்கால் -87.1; மாகி -97.9; ஏனாம் -79.5 சதவீதம் பேர் கல்வியறிவு கொண்டவர்களாக உள்ளனர். மாநிலத்தை 100 சதவீதம் எழுத்தறிவுமிக்க மாநிலமாக்கிட, புதிதாக மாநில எழுத்தறிவு பணி ஆணையம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்திற்கு கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் 8 பேர் கொண்ட நிர்வாக குழுவும், கல்வி துறை செயலர் தலைமையில் 10 பேர் கொண்ட செயற்குழுவும் ஏற்படுத்தப்பட் டுள்ளது. இக்குழுக்களுக்கு பள்ளி கல்வித் துறை இயக்குநர், மாநில பயிற்சி மைய சிறப்பு பணி அலுவலர் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கவர்னர் தமிழிசை பிறப்பித்துள்ளார்.கேரளா முன்னோடி
இந்தியாவில் எழுத்தறிவு பெற்ற மாநிலங்களில் கேரளா 94 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாற்ற கடந்த 1998 ம் ஆண்டு மாநில எழுத்தறிவு பணி ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் மூலம், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு எழுத, படிக்க கற்றுக் கொடுத்து 100 சதவீத கல்வியறிவு இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது.குறிப்பாக கேரளாவில் பழங்குடியின மக்கள் தவிர்த்து, மீனவ மக்கள், புலம்பெயர்ந்து கேரளாவுக்கு வந்த தொழிலாளர்கள் ஆகியோருக்கும் எழுத்தறிவு கற்பிக்கப்பட்டுள்ளது.சிறப்பு திட்டங்கள்
இதேபோல் புதுச்சேரி மாநிலத்திலும் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகள், மீனவ மக்கள், விளிம்புநிலை சமூகத்தில் இருக்கும் மக்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளித்து எழுத்தறிவு கொடுக்க சிறப்பு கல்வியறிவு திட்டங்கள் வகுத்து செயல்படுத்தப்பட உள்ளது. தன்னாட்சி அமைப்பு போன்று செயல்பட உள்ள மாநில எழுத்தறிவு பணி ஆணையம், தேர்வு நடத்தல், முடிவுகளை வெளியிடவும் உள்ளது. இதுவரை கற்றல் வாய்ப்பு இல்லாதவர்கள், பள்ளியில் இடை நின்றவர்கள் ஆணையத்தின் மூலம் படிப்பினை தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us