UPDATED : ஜூன் 24, 2023 12:00 AM
ADDED : ஜூன் 24, 2023 05:08 PM
கோவை:
கடந்த 1990ம் ஆண்டு கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை, கோவையில் நிறுவப்பட்டது. இந்த அறக்கட்டளை, குறுகிய காலத்தில் உயர் கல்வித்துறையில் தனக்கென தனி முத்திரை பெற்றுள்ளது.கே.எம்.சி.எச்., மற்றும் என்.ஜி.பி., கல்வி நிறுவனங்களில், கலை, அறிவியல், பொறியியல், பார்மஸி, பிசியோதெரபி, நர்ஸிங், ஆக்குபேஷனல் தெரபி போன்ற பல்துறை சார்ந்த பாடப்பிரிவுகள் உள்ளன. அறக்கட்டளை நடத்தி வரும் டாக்டர் என்.ஜி.பி., இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி, அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. நாக் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது. இங்கு பொறியியல் துறையில், 10 இளநிலை பாடப்பிரிவுகள் மற்றும் 4 முதுநிலை பாடப்பிரிவுகள் உள்ளன.பி.எச்.டி., படிப்புக்கான ஆராய்ச்சி நடத்தக்கூடிய உட்கட்டமைப்புடன் 4 துறைகள் செயல்படுகின்றன. 21ம் நுாற்றாண்டுக்கு ஏற்ற வகையில், தொழிற்சாலைகளுக்கு தேவையான திறன் நிறைந்த பொறியாளர்களை இக்கல்லுாரி உருவாக்கி வருகிறது. பாடங்கள் மட்டுமல்லாது, தொழில் பயிற்சிக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பன்னாட்டு மற்றும் இந்திய நிறுவனங்களின் பயிலகங்கள் இங்கு செயல்படுகின்றன. பல்வேறு சர்வதேச பல்லைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
