தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சாவர்க்கர், உபாத்யாய் பாடங்கள் சேர்ப்பு

சாவர்க்கர், உபாத்யாய் பாடங்கள் சேர்ப்பு

சாவர்க்கர், உபாத்யாய் பாடங்கள் சேர்ப்பு


UPDATED : ஜூன் 25, 2023 12:00 AM

ADDED : ஜூன் 25, 2023 12:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 25, 2023 12:00 AM ADDED : ஜூன் 25, 2023 12:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

லக்னோ:
உத்தரப் பிரதேச பாடத்திட்டத்தில், முன்னாள் பிரதமர் நேரு தொடர்பான பாடம் நீக்கப்பட்டு சுதந்திரப் போராட்டத் தலைவர் சாவர்க்கர் மற்றும் சமூக சேவகர் தீனதயாள் உபாத்யாய் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்படுவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின் போது, பள்ளிப் பாடத் திட்டத்தில் சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் வரலாறு சேர்க்கப்படும் என பா.ஜ., அறிவித்திருந்தது. இதைஅடுத்து, பள்ளிப் பாடத்திட்டத்தில் அடுத்த மாதம் முதல் பல்வேறு மாற்றங்கள் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக, சுதந்திரப் போராட்டத் தலைவர் சாவர்க்கர், சமூக சேவகர் தீனதயாள் உபாத்யாய் உட்பட 50 தலைவர்களின் வாழ்க்கை வரலாறு புதிய பாடத் திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன.அதேநேரத்தில் ஏற்கனவே பள்ளிப் பாடங்களில் இருந்த முன்னாள் பிரதமர் நேரு வாழ்க்கை வரலாறு நீக்கப்பட்டுள்ளது. மஹாத்மா காந்தி, அம்பேத்கர், சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரின் வரலாற்றில் பக்கங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில இடைநிலைக் கல்வி அமைச்சர் குலாப் தேவி கூறுகையில், சாவர்க்கர் மற்றும் தீன தயாள் உபாத்யாய் போன்ற தலைவர்களைப் பற்றி மாணவர்களுக்கு கற்பிக்கவில்லை என்றால் அவர்களுக்கு என்ன கற்பிப்பது என்றார்.புதிய பாடத் திட்டத்துக்கு நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், உயர்நிலைப் பள்ளி மற்றும் இடைநிலைத் தேர்வு மதிப்பெண் பட்டியலில் புதிய பாடத்துக்கான மதிப்பெண்கள் சேர்க்கப்படாது என மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே, நேரு குறித்த பாடம் நீக்கப்பட்டு சாவர்க்கர், தீன2தயாள் உபாத்யாய் குறித்த பாடங்கள் சேர்க்கப்பட்டதற்கு மாநில காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us