தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திருவண்ணாமலை மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று

திருவண்ணாமலை மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று

திருவண்ணாமலை மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று


UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM

ADDED : ஜூன் 27, 2023 09:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM ADDED : ஜூன் 27, 2023 09:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவண்ணாமலை:
நாட்டிலேயே முதன் முறையாக, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தேசிய தரச் சான்று பெற்றுள்ளது.மருத்துவமனைகளில் கிடைக்கும் சேவைகளின் தரத்தை ஆய்வு செய்து சான்றளிக்க, 2006-ல் தேசிய மருத்துவமனை அங்கீகார வாரியம் ஏற்படுத்தப்பட்டது. உயரிய தனியார் மருத்துவமனைகள் மட்டுமே, இந்த வாரிய சான்றை பெற்றுள்ளன. இந்நிலையில் நாட்டிலேயே முதன்முறையாக அரசு மருத்துவக் கல்லுாரிக்கான தரச்சான்றை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பெற்றுள்ளது.இதுகுறித்து கல்லுாரி டீன் அரவிந்தன் கூறியதாவது:
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், 2,500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் தினமும் சிகிச்சை பெறுகின்றனர். உள் நோயாளிகளாக 900 முதல் 1,000 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கடந்த மாதத்தில் மட்டும் 1,038 கர்ப்பிணியருக்கு பிரசவம் நடந்துள்ளது. தேசிய மருத்துவமனை அங்கீகார வாரியம் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பின் தரச்சான்று வழங்கியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us