தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ கல்வி கட்டணம் அதிகரிப்பு

மருத்துவ கல்வி கட்டணம் அதிகரிப்பு

மருத்துவ கல்வி கட்டணம் அதிகரிப்பு


UPDATED : ஜூன் 30, 2023 12:00 AM

ADDED : ஜூன் 30, 2023 03:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 30, 2023 12:00 AM ADDED : ஜூன் 30, 2023 03:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் 36 மருத்துவக் கல்லுாரிகள், இரண்டு பல் மருத்துவ கல்லுாரிகள் என, 38 அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இதில், 5,050 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 200 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை துவங்க உள்ள நிலையில், மருத்துவ கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. மாணவர்களின் நுாலகம், ஆராய்ச்சி வசதிகளுக்காக, கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது என, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறினர்.எம்.பி.பி.எஸ்., கட்டணம் (ரூ)
பிரிவு - பழைய கட்டணம் - புதிய கட்டணம்பொது 13,610 - 18,073எஸ்.சி., எஸ்.டி., - 9,610 - 12,073பி.டி.எஸ்., கட்டணம் (ரூ)
பிரிவு - பழைய கட்டணம் - புதிய கட்டணம்பொது -11,610 - 16,073எஸ்.சி., எஸ்.டி., - 9,610 - 12,073சுயநிதி கல்லுாரிகளில் கட்டணம் எவ்வளவு?
சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு வேலுார் சி.எம்.சி., கல்லுாரியில் 53,000 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற கல்லுாரிகளில் அதிகபட்சம் 4.50 லட்சம் ரூபாய். பி.டி.எஸ்., இடங்களுக்கு 2.50 லட்சம் ரூபாயாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  நிர்வாக ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு 13.50 லட்சம் ரூபாய்; பி.டி.எஸ்., படிப்பிற்கு 6 முதல் 9 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us