UPDATED : ஜூலை 05, 2023 12:00 AM
ADDED : ஜூலை 05, 2023 09:59 AM
திருப்பூர்:
திருப்பூர் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்று, கலெக்டரிடம் மனு அளித்தனர்.அதன்பின், ஆசிரியர்கள் கூறியதாவது:
கடந்த 2013 முதல் 2022ம் ஆண்டு மற்றும் நடப்பாண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்று, அரசாணை எண்:149-ல் குறிப்பிட்டுள்ளபடி நியமன தேர்வுக்கு தயாராகி வருகிறோம். திருப்பூர் மாவட்டத்தில், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். அனைத்து அரசு பணிகளிலும், மதிப்பெண் அடிப்படையில்தான் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலை டி.ஆர்.பி., தேர்விலும், மதிப்பெண் முறையே பின்பற்றுகிறது. எனவே, அரசாணை எண்: 149-ன்படி, நியமன தேர்வை விரைந்து நடத்த வேண்டும். நியமனத்தேர்வை ரத்து செய்தால், இளைஞர்கள், ஆசிரியர் பணியை வெறுக்கும் அபாய நிலை ஏற்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
