தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போதை பொருட்களை தடுக்க தீர்மானம்

போதை பொருட்களை தடுக்க தீர்மானம்

போதை பொருட்களை தடுக்க தீர்மானம்


UPDATED : ஜூலை 05, 2023 12:00 AM

ADDED : ஜூலை 05, 2023 10:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 05, 2023 12:00 AM ADDED : ஜூலை 05, 2023 10:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி:
தர்மபுரி மேற்கு மாவட்ட, பா.ம.க, மாணவர் சங்க பொதுக்குழு கூட்டம், தர்மபுரி அடுத்த ஒட்டப்பட்டியில் நடந்தது. மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். பா.ம.க., கவுரவ தலைவரும், பென்னாகரம், எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி, மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ்வரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி.,க்கள் பாரிமோகன், செந்தில் உட்பட பலர் பேசினர்.கூட்டத்தில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் சரியான விதிகளை பின்பற்றி சமூக நீதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். நடப்பு கல்வி ஆண்டிலேயே வன்னியர்களுக்கு, 10.5 உள் ஒதுக்கீடு சட்டத்தை, தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். பள்ளி, கல்லுாரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும். பள்ளி, கல்லுாரிகளில் போதை பொருட்களின் நடமாட்டத்தை கண்காணித்து, தமிழக அரசு தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us