தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விண்வெளி அறிவியல் படிக்க விருப்பமா...

விண்வெளி அறிவியல் படிக்க விருப்பமா...

விண்வெளி அறிவியல் படிக்க விருப்பமா...


UPDATED : ஜன 06, 2010 12:00 AM

ADDED : ஜன 06, 2010 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 06, 2010 12:00 AM ADDED : ஜன 06, 2010 10:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இது ISAT2010 என்ற பெயரில் 2010ம் ஆண்டு ஏப்., 16ம் தேதி இந்தியாவிலுள்ள 30 நகரங்களில் நடைபெறுகிறது. ஐ.ஐ.எஸ்.டி., இதற்கு முன் ஐ.ஐ.டி., - ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில் மெரிட்டில் தேர்வாகும் மாணவர்களையே சேர்த்து வந்தது. ஐ.ஐ.எஸ்.டி., மூன்று இளநிலை படிப்பு மற்றும் வான்வழி பயனயியல், விண்வெளி இன்ஜினியரிங், இயற்பியல் இன்ஜினியரிங் போன்ற துறைகளில் 4 வருட பி.டெக் படிப்புகளையும் நடத்தி வருகிறது. இந்த மூன்று துறைகளிலும் மொத்தமுள்ள 156 இடங்களுக்கு நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது.


தேர்வு முறை: இரண்டு வினாத்தாள்களும் கொள்குறி வகையில் இருக்கும். இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய மூன்று பிரிவுகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். தேர்வுக்கான பாடத்திட்டம் ஐ.ஐ.எஸ்.டி., யின் வெப்சைட்டில் உள்ளது.


தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை மற்றும் பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட 30 நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது.


தேர்வு கட்டணம்: பொது மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு 500 ரூபாய், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் அனைத்து பிரிவு மாணவிகளுக்கு 250 ரூபாய்.


தேர்வுக் கட்டணத்தை எதாவது ஒரு தேசிய வங்கியில் கீழ்கண்ட முகவரிக்கு டிடி எடுத்து அனுப்ப வேண்டும்.
The Registrar, IIST, திருவனந்தபுரத்தில் மாற்றத்தக்க வகையில் எடுக்க வேண்டும்.


நுழைவுத்தேர்வு தகுதிகள்


பிறந்த தேதி: பொது மற்றும் பிற்படுத்தப்பட்டோர் அக்.,1 , 1985 க்கு பின் பிறந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  அக்.,1, 1980 க்கு பின் பிறந்திருக்க வேண்டும்.


கல்வித் தகுதி: 2009 மற்றும் 2010 ஜூலை 1ம் தேதிக்குள் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். பொது மற்றும் பிற்படுத்தப்பட்டடோர் பத்தாம் வகுப்பில் 70 சதவீதமும், பிளஸ் 2வில் அறிவியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் 70 சதவீதமும் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இரண்டு வகுப்புகளிலும் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.


விண்ணப்பிக்கும் முறை:
நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 2010 ஜன. 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


வெப்சைட்: www.iist.ac.in/IIST/ISAT2010 மற்றும்  www.isac.gov.in/iist
தொலைபேசி: 0471 - 2564831,2564832


தேர்வு அட்டவணை
தேர்வு தேதி: ஏப்., 16, 2010
முதல் தாள்: காலை 10 - 12
இரண்டாம் தாள்: மதியம் 2 - 4

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us