தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்

பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்

பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்


UPDATED : ஜூலை 06, 2023 12:00 AM

ADDED : ஜூலை 06, 2023 09:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 06, 2023 12:00 AM ADDED : ஜூலை 06, 2023 09:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட துவக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வேண்டும் என, கலெக்டர் அறிவுறுத்தினார்.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் முதல்வரின் காலை உணவு திட்டத்திற்கு பாத்திரங்கள் கொள்முதல் செய்வது மற்றும் மளிகை பொருட்களின் தரம், கொள்ளவு விலை தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கல்வராயன்மலை வட்டத்தில் 15 அரசு துவக்கப் பள்ளியில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 8 வட்டாரங்களில் உள்ள ஊராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட 638 அரசு துவக்கப் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. காலை உணவு திட்டத்தால் துவக்கப் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கல்வி கற்கும் சூழல் உருவாகும். இத்திட்டத்தில் பள்ளிகளில் காலை உணவு சமைப்பதற்கான பாத்திரங்கள் கொள்முதல் செய்வது, தரமான மளிகை பொருட்கள் வழங்குவது, கொள்ளவு விலை தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது. காலை உணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடிய அனைத்து பணிகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குனர் சுந்தராஜன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ரத்தினமாலா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us