தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளியில் கட்டாய டியூஷனா?

அரசு பள்ளியில் கட்டாய டியூஷனா?

அரசு பள்ளியில் கட்டாய டியூஷனா?


UPDATED : ஜன 06, 2010 12:00 AM

ADDED : ஜன 06, 2010 11:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 06, 2010 12:00 AM ADDED : ஜன 06, 2010 11:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தியாகதுருகம்: அரசு பள்ளியில் மாணவர்களை கட்டாயப்படுத்தி டியூஷன் எடுத்து, ஆசிரியர்கள் பணம் பறிப்பதாக ஒட்டப்பட்ட நோட்டீஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவர்களை கட்டாயப்படுத்தி டியூஷனுக்கு வரவழைத்து பணம் பறிப்பதாக அனைத் திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் மாணவர் பெருமன்றம் சார்பில் தியாகதுருகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.


அதில், சில ஆசிரியர்கள் பெயர் குறிப்பிட்டு, அவர்கள், டியூஷன் என்ற பெயரில் சிறப்பு வகுப்புகளை எடுத்து, 6.5 லட்சம் ரூபாய் வரை மாணவர்களிடமிருந்து மிரட்டி பெறுகின்றனர்; பணம் தராத மாணவர்களின் பிராக்டிக்கல் மார்க்கை குறைத்துவிடுவதாக மிரட்டுகின்றனர்; விசாரணை நடத்தி கல்வித் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடைவீதி, பள்ளி சுவர், பஸ் நிலையம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள இந்த நோட்டீஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us