தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நூற்றாண்டு சின்னம் கடிதங்களில் கட்டாயம்

நூற்றாண்டு சின்னம் கடிதங்களில் கட்டாயம்

நூற்றாண்டு சின்னம் கடிதங்களில் கட்டாயம்


UPDATED : ஜூலை 12, 2023 12:00 AM

ADDED : ஜூலை 12, 2023 06:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 12, 2023 12:00 AM ADDED : ஜூலை 12, 2023 06:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு கடிதங்கள், விழா அழைப்பிதழ்கள், மேடை அமைப்புகளில் கருணாநிதி நுாற்றாண்டு விழா சின்னம் இடம் பெற வேண்டும் என வீட்டுவசதி துறை உத்தரவிட்டு உள்ளது.வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி துறையின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகள் இயங்குகின்றன. இவற்றின் சார்பில் பயன்படுத்தப்படும் கடிதங்கள், விழா அழைப்பிதழ்களுக்கு, புதிய கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது குறித்து வீட்டுவசதி துறை அனுப்பியுள்ள கடிதம்:
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, இதற்காக ஒரு சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. துறை சார்ந்த அனைத்து அரசு கடிதங்கள், விழா அழைப்பிதழ்கள், லெட்டர் பேடுகள், மேடை அமைப்புகள், துண்டுபிரசுரங்கள் ஆகியவற்றில் கருணாநிதி நுாற்றாண்டு சின்னம் இடம்பெற வேண்டும். தமிழக அரசின், www.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து இந்த சின்னத்தை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us