தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதல்வர் கணினி தமிழ் விருது

முதல்வர் கணினி தமிழ் விருது

முதல்வர் கணினி தமிழ் விருது


UPDATED : ஜூலை 19, 2023 12:00 AM

ADDED : ஜூலை 19, 2023 09:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2023 12:00 AM ADDED : ஜூலை 19, 2023 09:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழ்நாடு நாள் விழாவில் முதல்வர் கணினி தமிழ் விருதுகளை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.சென்னை மாநில கல்லுாரியில், தமிழ்நாடு நாள் விழா நடந்தது. விழாவில், அமைச்சர்கள் சாமிநாதன், சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். கடந்த, 2021ம் ஆண்டுக்கான, முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட, என்.எஸ்.நாணா என்கிற நாராயணனுக்கும், 2022ம் ஆண்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆரோக்கியதாசுக்கும், அமைச்சர் சாமிநாதன் விருதுகளை வழங்கினார்.விருதாளர்களுக்கு விருது தொகையாக, தலா 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை, தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கப்பட்டன. பள்ளி மாணவ - மாணவியருக்கு இடையே மாநில அளவில் நடந்த பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மாணவ - மாணவியருக்கு சிறப்பு மலர் வெளியிடப்பட்டு, குறும்படம் திரையிடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us