UPDATED : ஜன 08, 2010 12:00 AM
ADDED : ஜன 08, 2010 02:17 PM
இத்தகவலை அந்நாட்டு குடியேற்றத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேற்படிப்பு படிப்பதற்காக இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆஸ்திரேலியாவிற்குச் செல்கின்றனர்.
கடந்த ஓர் ஆண்டாக, அங்கு இந்திய மாணவர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடந்து வருகிறது.சிறிது காலத்துக்குப் பிறகு சமீபத்தில் பஞ்சாப்பைச் சேர்ந்த நிதின் கார்க் என்பவர் கொல்லப்பட்டார். அதேபோல் ஓர் இந்திய மாணவரின் சடலம் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.இந்நிலையில், அந்நாட்டுக் குடியேற்றத் துறை அமைச்சர் சாண்டி லோகன், பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவிலிருந்து படிப்புக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 46 சதவீதம் குறைந்துள்ளது. உலகளாவிய நிலையில் 20 சதவீதம் குறைந்துள்ளது. இனவெறித் தாக்குதல் தான் இந்தக் குறைவுக்குக் காரணம் என்று சொல்ல முடியாது. வெளி நாடுகளிலிருந்து வரும் மாணவர்களின் விசா விண்ணப்பங்கள் கடுமையாகப் பரிசோதிக்கப் படுகின்றன. அதுதான் இந்தக் குறைவுக்குக் காரணம்.
இந்தியா, பிரேசில், மொரிஷியஸ், நேபாளம், ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் விண்ணப் பங்களை குடியேற்றத்துறை,தொடர்ந்து பல பரிசீலனைகளுக்குப் பின்பு, வடிகட்டிய பின்புதான் அனுமதிக்கிறது. இருப்பினும் இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் பெருமளவு குறைந்து விட்டன என்பது உண்மைதான்.
இது உலகளாவிய நிதி நெருக்கடியாலும் இருக்கலாம். ஆனாலும் முழுமையான சோதனைகள் தான் விசா விண்ணப் பங்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளன. இவ்வாறு லோகன் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கான சர்வதேச கல்வி அறிவுரையாளர் காத்ரீன் ரிச்சர்ட்சன் கூறுகையில், வெளிநாட்டு மாணவர்கள் இங்கு வன்முறைகளில் ஈடுபடுகின்றனர் என்ற உண்மையையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது&' என்றார்.இதற்கிடையில் மேலும் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நிகழா வண்ணம், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கிய இடங்களில் மெட்டல் டிடக்டர் மூலம் சோதனை நடக்கிறது.
