தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆராய்ச்சியாளர்கள் மல்லிகை செடிகளில் ஆய்வு

ஆராய்ச்சியாளர்கள் மல்லிகை செடிகளில் ஆய்வு

ஆராய்ச்சியாளர்கள் மல்லிகை செடிகளில் ஆய்வு


UPDATED : ஜூலை 28, 2023 12:00 AM

ADDED : ஜூலை 28, 2023 09:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 28, 2023 12:00 AM ADDED : ஜூலை 28, 2023 09:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நிலக்கோட்டை:
தினமலர் செய்தி எதிரொலியாக மல்லிகை தோட்டங்களில் பெரியகுளம் தோட்டக்கலை பல்கலை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.நிலக்கோட்டை ஒன்றியத்தில் 1500 ஏக்கரில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் குல்லலக்குண்டு, மாலையகவுண்டம்பட்டி கிராமங்களில் 160 ஏக்கர்களில் மல்லிகை சாகுபடி நடக்கிறது. இப்பகுதிகளில் மல்லிகை பூக்கள் மொட்டுக்களிலேயே அழுகி விடுவதால் விவசாயிகள் பாதிப்படைந்தனர். தொடர்ந்து பூச்சி மருந்து தெளித்தும் பலன் கிடைக்கவில்லை. விவசாயிகள் கலெக்டர் பூங்கொடி, தோட்டக்கலை அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இது சம்பந்தமாக தினமலர் நாளிதழில் கடந்த 23ல் செய்தி வெளியானது.இதைதொடர்ந்து பெரியகுளம் வேளாண் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் டாக்டர் முத்தையா, தோட்டக்கலை வல்லுநர் ராஜதுரை, தாவர நோயியல் வல்லுநர் கல்பனா குழுவினர் பாதிப்படைந்த மல்லிகை தோட்டங்களை வயல் ஆய்வு செய்து மொட்டு ஈ, அதன் புழுக்களின் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். மேலும் வயல் பராமரிப்பு மற்றும் பூச்சி மருந்து தெளிப்பது குறித்து விளக்கமாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். தோட்டக்கலை உதவி இயக்குனர் நம்பி ஷோபனா, தோட்டக்கலை உதவி அலுவலர்கள் இருந்தனர்.ராபர்ட் , விவசாயி,முருகத்துாரன்பட்டி:
ஆராய்ச்சியாளர்கள் ஒரு வாரம் கழித்து முடிவு சொல்வதாக தெரிவித்துள்ளனர். மருந்து மாற்றி தெளிக்க சொல்லி உள்ளனர். ஆனால் அந்த மருந்து மதுரையில் மட்டுமே கிடைக்கிறது. நிலக்கோட்டையில் கிடைக்க வழி செய்ய வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us