UPDATED : ஆக 05, 2023 12:00 AM
ADDED : ஆக 05, 2023 05:53 PM
தேனி:
தேனி மாவட்டத்தில் அன்னஞ்சி, ஆண்டிபட்டி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசின் சமக்ரா சிக் ஷா திட்டத்தில் தேசிய திரைப்படத்துறை வளர்ச்சிக்கழகம் இணைந்து மல்டிமீடியா கோர்ஸ் பயிற்சி வழங்குகின்றன.இப்பயிற்சி தேனி அன்னஞ்சி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் ஆய்வகத்தில் மல்டி மீடியா கோர்ஸ் பயிற்சி துவங்கி நடந்து வருகிறது. இப் பயிற்சி வழங்கிய தனியார் நிறுவன நிர்வாகி முத்துக்குமார் கூறுகையில், மத்திய அரசின் திட்டத்தில் 9, பிளஸ் 1 மாணவர்கள் தலா 20 பேர் வீதம் 40 மாணவர்கள் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மல்டிமீடியா கோர்ஸ் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியில் திரைத்துறையில் மாணவர்களின் ஆர்வத்தை வளர்க்கும் வகையில் போட்டோக்கள், வீடியோக்கள் எடிட்டிங், கணினி அடிப்படை பயிற்சிகள் வழங்கப்டுகிறது. இப்பயிற்சியில் தினமும் 2 மணி நேரம் வழங்கப்படுகிறது. பயிற்சி நடைபெறும் பள்ளிக்கு மத்திய அரசு 10 லேப்டாப்கள் வழங்கியதில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குகிறோம். பயிற்சி முடிந்ததும் லேப்டாப்கள் திரும்ப அனுப்பபடும். இப்பயிற்சி முடிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியை தேர்ந்தெடுப்பதற்கு உதவும். மேலும் கல்லுாரிகளில் விஷுவல் கம்யூனிகேஷன் வகுப்பில் கற்றுக்கொடுக்கப்படுக்கும் பாடங்களை இம் மாணவர்களுக்கு கற்றுத்தருகிறோம். ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சி வழங்குகிறோம். பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமரன் உடனிருந்தார்.
