UPDATED : ஆக 13, 2023 12:00 AM
ADDED : ஆக 13, 2023 06:08 PM
அ நிறம் | அளவு
வாலாஜாபாத்:
வாலாஜாபாத் அடுத்த, அவளூர் அரசு மேல்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் சந்திரசேகரன்.இவர், பள்ளி மாணவர்கள் சேர்க்கை, அறிவியல் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பது, பாரத சாரண - சாரணியர் இயக்க மாணவ - மாணவியரை நெறிப்படுத்தி, ராஜபுரஷ்கார் விருது பெற ஊக்குவித்து வருவது போன்ற பல ஆக்கப்பூர்வமான செயல்களை செய்து வருகிறார். இவரது சேவையை பாராட்டி, பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அவருக்கு, அன்பாசிரியர் விருது வழங்கினார். இது, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக இருக்கிறது என, விருது பெற்ற சந்திரசேகரன் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
