தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ இடங்களை அதிகரிக்க கோரிக்கை

மருத்துவ இடங்களை அதிகரிக்க கோரிக்கை

மருத்துவ இடங்களை அதிகரிக்க கோரிக்கை


UPDATED : ஆக 22, 2023 12:00 AM

ADDED : ஆக 22, 2023 09:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 22, 2023 12:00 AM ADDED : ஆக 22, 2023 09:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
வி.ஐ.டி., பல்கலை பட்டமளிப்பு விழா மற்றும் புதிய கட்டடங்கள் திறப்பு விழா, சென்னையை அடுத்த, திருப்போரூர், மேலக்கோட்டையூரில் நேற்று நடந்தது. விழாவில், வி.ஐ.டி., பல்கலை வேந்தர் மற்றும் நிறுவனர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.துணை தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன், சேகர் விஸ்வநாதன், நிர்வாக இயக்குனர் சந்தியா பென்டாரெட்டி மற்றும் உதவி துணை தலைவர் காதம்பரி விஸ்வநாதன் உள்ளிட்டோர், முன்னிலை வகித்தனர். வி.ஐ.டி., பல்கலை துணைவேந்தர் முனைவர் ராம்பாபு கோடாலி, வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக, நாகாலாந்து கவர்னர் இல.கணேசன், கவுரவ விருந்தினராக, வால்மார்ட் குளோபல் - இந்தியா நிறுவன மூத்த துணை தலைவர் பாலு சதுர்வேதுலா பங்கேற்றனர். விழாவில், பி.டெக்., பொறியியல், பிஎச்.டி.,உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்ற, 33 மாணவ - மாணவியருக்கு, தங்க பதக்கங்கள் மற்றும் 2,961 மாணவ - மாணவியருக்கு, பட்டங்கள் வழங்கப்பட்டன.விழாவில், கவர்னர் இல.கணேசன் பேசியதாவது:
வி.ஐ.டி., வேலுார் நிறுவனமானது 1984ல் துவக்கப்பட்டது. தற்போது, நாட்டின் ஐந்து இடங்களில், 85,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 3,600க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுடன் இயங்கி வருகிறது. புது தொழில்நுட்பம், ஆராய்ச்சி உள்ளிட்டவற்றை புகுத்தி சிறந்த மாணவர்களை உருவாக்கி, நாட்டின் முன்னேற்றத்திற்காக முன்னிலை கல்வி நிறுவனமாக திகழ்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.வி.ஐ.டி., பல்கலை நிறுவனர் விஸ்வநாதன் பேசியதாவது:
நாட்டில் 10 சதவீதம் இந்தியர்கள் மட்டுமே பட்டதாரிகளாக உள்ளனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில், கல்விக்கு கடந்தாண்டு, 3.1 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அது இந்தாண்டு, 2.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் சிறந்து விளங்கக் கூடிய அனைத்து நாடுகளும், கல்வியில் சிறப்பாக உள்ளன. எனவே, கல்வி, ஆராய்ச்சி மற்றும் சுகாதாரத்தில், கவனம் செலுத்த வேண்டும். நாடு முழுவதும், 20 லட்சம் மாணவர்கள் மருத்துவம் படிக்க விரும்புகின்றனவர். ஆனால், 1 லட்சம் இடங்கள் மட்டுமே உள்ளன.தமிழகத்தில் 1.5 லட்சம் மாணவர்கள் மருத்துவம் படிக்க விரும்புகின்றனர். ஆனால், 10,000 இடங்கள் தான் உள்ளன. இதனால் தான், மாணவர்கள் சீனா, ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட பல நாடுகளுக்கு படிக்க செல்கின்றனர். மத்திய - மாநில அரசுகள் இணைந்து, மாநிலம் தோறும் மருத்துவ படிப்பு இடங்களை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு பேசினார்.நிகழ்வின் முன்னதாக, கவர்னர் இல.கணேசன், வி.ஐ.டி., பல்கலை நிறுவனர் விஸ்வநாதன் இணைந்து, சுவாமி விவேகானந்தா மாணவர் விடுதி கட்டடம் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல்கலாம் கல்வி வளாகக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us