தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளிகளில் ஹைடெக் லேப்

அரசு பள்ளிகளில் ஹைடெக் லேப்

அரசு பள்ளிகளில் ஹைடெக் லேப்


UPDATED : ஆக 22, 2023 12:00 AM

ADDED : ஆக 22, 2023 11:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 22, 2023 12:00 AM ADDED : ஆக 22, 2023 11:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில், ஹைடெக் ஆய்வகம் அமைக்கும் பணிகளில் தனியார் டெக் நிறுவனங்களை தேர்வு செய்வதில் பிரச்னை வெடித்துள்ளது.நடப்பு நிதி ஆண்டில், அரசு பள்ளிகளில் அதிநவீன ஹைடெக் ஆய்வகம் அமைக்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2,996 அரசு நடுநிலை பள்ளிகள் மற்றும் 540 உயர்நிலை பள்ளிகளில், 175 கோடி ரூபாய் செலவில், ஹைடெக் ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. ஆய்வகத்துக்கு தேவையான கணினி, மின்னணு திரை மற்றும் தொழில்நுட்ப கருவிகள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, தனியார் கணினி தொழில்நுட்ப நிறுவனங்களை தேர்வு செய்ய, பள்ளிக் கல்வி முடிவு செய்துள்ளது.இதற்காக, சென்னை தலைமை செயலகத்தில், முதன்மை செயலர் காகர்லா உஷா தலைமையில், பள்ளிக் கல்வி அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், ஐ.டி., நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான டெண்டரை இறுதி செய்யாததால், கொள்முதல் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில், ஹைடெக் ஆய்வகம் அமைக்க, கம்ப்யூட்டர், மல்டி மீடியா புரொஜக்டர் உள்ளிட்ட சாதனங்கள் வாங்கப்பட வேண்டும். இதற்கான டெண்டர் விதிகளும், பங்கேற்க வேண்டிய நிறுவனங்களுக்கான நிதி மற்றும் முதலீடு விதிகளும் வகுக்கப்பட உள்ளன.இதில், சர்வதேச மற்றும் உள்நாட்டு நிறுவனங்களில், குறைந்த விலை, சிறந்த தரம், முழுமையான பராமரிப்பு போன்ற வசதிகள் கொண்ட, முன்னணி நிறுவனங்களை தேர்வு செய்யும் வகையில் விதிகள் வகுக்க வேண்டும். இதற்கு, எல் அண்ட் டி, ஏசர், டெல், ஹெச்.பி., - டி.சி.எஸ்., உள்ளிட்ட நிறுவனங்களிடம் நேரடி கொள்முதலோ அல்லது ஏதாவது ஒரு நிறுவனத்தின் வழியாக, மூன்றாம் நபர் கொள்முதலாகவோ மேற்கொள்ளலாம் என, ஆலோசிக்கப்பட்டுள்ளது.இதில் எல் அண்ட் டியின் கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தை தேர்வு செய்வதற்கு, அதிகாரிகளில் ஒரு தரப்பில் அதிக ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. அதற்கு சாதகமாக, டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களின் ஆண்டு விற்பனை வருவாய், 10,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்க வேண்டும் என, நிபந்தனை விதிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.இப்படி ஒரு நிறுவனத்துக்கு ஆதரவாக விதிகளை வகுக்கக் கூடாது என, மற்றொரு தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளதால், விதிகளை இறுதி செய்யும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. ஐ.டி., நிறுவனங்களை தேர்வு செய்யும் பணியும் நிறுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.எல் அண்ட் டி நிறுவனத்தின் சமூக பங்களிப்பு திட்டத்தில், தமிழகத்தில் உள்ள, 100 அரசு பள்ளிகளில், 11 கோடி ரூபாய் செலவில் அறிவியல், கணிதம் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகம் அமைத்து தர, நம்ம ஸ்கூல் திட்டத்தில், ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us