தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எஸ்.ஐ., எழுத்து தேர்வு ஆப்சென்டீஸ்

எஸ்.ஐ., எழுத்து தேர்வு ஆப்சென்டீஸ்

எஸ்.ஐ., எழுத்து தேர்வு ஆப்சென்டீஸ்


UPDATED : ஆக 27, 2023 12:00 AM

ADDED : ஆக 27, 2023 10:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 27, 2023 12:00 AM ADDED : ஆக 27, 2023 10:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் பணிகளுக்கான எழுத்து தேர்வு, ஸ்ரீபெரும்புதுார் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரி, ராஜலட்சுமி பொறியியல் கல்லுாரி, காஞ்சிபுரம் பாரதிதாசன் மேல்நிலைப் பள்ளி, ஏனாத்துார் சங்கரா கலை அறிவியல் கல்லுாரி ஆகிய நான்கு இடங்களில் நேற்று நடந்தது. இப்பதவிகளுக்காக 1,582 பெண்கள் உட்பட 8,365 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். தேர்வில் பங்கேற்றவர்கள் 6,917. தேர்வுக்கு வராதவர்கள் 1,448. தேர்வு நடந்த இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மாவட்ட எஸ்.பி., சுதாகர் தேர்வு மையங்களை நேரில் ஆய்வு செய்தார்.எஸ்.ஐ., எழுத்து தேர்வு 534 பேர் ஆப்சென்ட்திருவள்ளூர்
திருவள்ளூரில் நேற்று நடந்த எஸ்.ஐ., எழுத்துத் தேர்வில் 534 பேர்பங்கேற்கவில்லை. தமிழ்நாடு காவல் துறையில், எஸ்.ஐ., பணிக்கு நேற்று மாநிலம் முழுதும் எழுத்துத் தேர்வு நடந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில், காக்களூர் சி.சி.சி., இந்து மெட்ரிக் பள்ளி, திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளி மற்றும் டி.ஆர்.பி.சி.சி., உயர்நிலைப் பள்ளி ஆகிய மூன்று தேர்வு மையங்களில், எழுத்து தேர்வு நடந்தது.இத்தேர்வில், 1,945 ஆண்கள், 454 பெண்கள் என மொத்தம், 2, 399 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று நடந்த தேர்வில், 430 ஆண்கள், 104 பெண்கள் என, மொத்தம், 534 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. தேர்வு நடைபெறும் மையங்களில், எஸ்.பி., சிபாஸ் கல்யாண் தலைமையில், 2 ஏ.டி.எஸ்.பி.,கள், 5 டி.எஸ்.பி.,கள் 13 இன்ஸ்பெக்டர் உள்பட 300 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த போலீஸ் எஸ்.ஐ., தேர்வை 5823 பேர் எழுதிய நிலையில் 1097 பேர் ஆப்சென்ட் ஆகினர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 749 இடங்களுக்கான போலீஸ் எஸ்.ஐ., க்கான எழுத்து தேர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று பொது தேர்வர்களுக்கு எழுத்து தேர்வு மாநிலம் முழுவதும் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் 6,920 பொதுத் தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு பி.எஸ்.என்.ஏ., எஸ்.எஸ்.எம்., சக்தி, பார்வதீஸ் என 4 கல்லூரிகளில் 5 மையங்கள் அமைக்கப்பட்டது.காலை 8:00 மணி முதலே தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் வரத்தொடங்கினர். நுழைவுவாயிலில் ஹால்டிக்கெட் சரிபார்க்கப்பட்டு சோதனை செய்த பின்னரே உள்னே அனுமதிக்கப்பட்டனர்.ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர், அலைபேசி, புளுடூத் உட்பட அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இளைஞர்கள் முழுக்கை சட்டையை மடித்து அணிய கூடாது என போலீசார் அறிவுறுத்தினர். பெண்களை பெண் போலீசார் சோதனை செய்த பின்னரே அனுமதித்தனர். திண்டுக்கல் டி.ஐ.ஜி. அபினவ்குமார், எஸ்.பி., பாஸ்கரன் தேர்வு மையங்களை பார்வையிட்டனர். தேர்வை 5823 பேர் எழுதிய நிலையில் 1097 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதே போல் இன்று போலீஸ் துறையில் பணியாற்றும் தேர்வர்கள் 1440 பேருக்கு திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லுாரியில் தேர்வு நடக்கிறது.தேனி
தேனியில் நான்கு மையங்களில் நடந்த போலீஸ் எஸ்.ஐ., தேர்வில் 2884 பங்கேற்றனர். தேனி மாவட்டத்தில் எஸ்.ஐ., தேர்வு முத்துத்தேவன்பட்டி டி.எம்.எச்.என்.யூ., பள்ளி, தேனி கம்மவார் சங்கம் கலை, அறிவியல் கல்லுாரி, வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரி, மதுரை ரோடு மேரிமாத மெட்ரிக் பள்ளியில் நடந்தது.இதில் மேரிமாத பள்ளியில் பெண்கள் மட்டும் தேர்வு எழுதினர். 4 மையங்களில் தேர்வு எழுத ஆண்கள் 2844 பேர், பெண்கள் 644 பேர் என மொத்தம் 3488 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தேர்வு காலையில் பொது அறிவுத் தேர்வு, மதியம் தமிழ் தகுதித் தேர்வும் நடந்தது. தேர்வில் ஆண்கள் 2367பேர், பெண்கள் 517 பேர் என 2884 பேர் பங்கேற்றனர். ஆண்கள்477 பேர், பெண்கள் 127 பேர் என 604 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. தேர்வு மையங்களை சென்னை காவலர் பயிற்சி கல்லுாரி, பயிற்சித் துறை தலைவர் தமிழ்சந்திரன், எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே நேரில் ஆய்வு செய்தனர். தேர்வு பாதுகாப்பு பணியில் ஏ.டி.எஸ்.பி., 3 டி.எஸ்.பி.,க்கள், 24 இன்ஸ்பெக்டர்கள், 54 எஸ்.ஐ.,க்கள் உட்பட 618 போலீசார் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us