தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நிப்ட்-டீ கல்லூரியில் ஆலோசனை

நிப்ட்-டீ கல்லூரியில் ஆலோசனை

நிப்ட்-டீ கல்லூரியில் ஆலோசனை


UPDATED : ஆக 28, 2023 12:00 AM

ADDED : ஆக 28, 2023 09:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2023 12:00 AM ADDED : ஆக 28, 2023 09:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
நிப்ட்-டீ கல்லுாரி நிர்வாகிகளை சந்தித்த, யெஸ் இந்தியா கேன் அமைப்பினர், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், விரிவான கலந்தாய்வு கூட்டமும், பேஷன் ஷோ நிகழ்ச்சிகளும் நடத்தலாம் ஆலோசித்துள்ளது.சர்வதேச சந்தைகளில், செயற்கை நுாலிழையில் தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட ஆடைகளுக்கு, அதிகப்படியான வரவேற்பு கிடைக்கிறது. இத்தகைய ஆடைகள் மென்மையாக இருப்பதுடன், வியர்வை உறிஞ்சும் தன்மையுடன், குளிர்ச்சியான ஆடையாகவும் உள்ளன. வெப்பம், குளிர் இரு சீதோஷ்ணத்துக்கும் பொருந்துகிறது. பருத்தி ஆடைகளுடன் ஒப்பிடுகையில், வலிமையான ஆடையாகவும், நீடித்து உழைக்கும் தன்மையுடனும் இருக்கிறது.நம்பிக்கையுடன் செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியை கையில் எடுக்கும் நாடுகள், அதிக வாய்ப்புகளை அள்ளியெடுப்பார்கள். திருப்பூர் ஏற்கனவே, முழு கட்டமைப்புடன் இயங்குவதால், எளிதாக பாலியஸ்டர் ஆடை உற்பத்திக்கு மாறமுடியும் என்பதே பலரது நம்பிக்கை. இளம் தொழில்முனைவோரும், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் கால்பதித்தால், உலக அளவிலான ஆயத்த ஆடை சந்தையில், இந்தியா முதன்மை நாடாக உயரும்; ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் புதிதாக உருவாக முடியும்.திறமை வாய்ந்த திருப்பூர் தொழிலாளர்களால், உலக மக்கள் விரும்பியபடி ஆடைகளை உருவாக்க முடியும். ஒட்டுமொத்த திருப்பூரும், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு மாறிக்கொண்டிருக்கிறது.ஆலோசனை
இந்நிலையில், நிப்ட்-டீ கல்லுாரியின் முதன்மை ஆலோசகர் ராஜா சண்முகத்தை சந்தித்து, &'யெஸ் இந்தியா கேன் அமைப்பு ஆலோசித்துள்ளது. செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு தேவையான வழிகாட்டுதலை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். திருப்பூரிலும், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும், பேஷன் ேஷா வாயிலாக, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தலாம். புதிய மாடல்கள் மூலமாக, தங்கள் பேஷன் ஸ்டுடியோ வாயிலாக, வடிவமைத்து கொடுக்கவும் இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது.யெஸ் இந்தியா கேன் அமைப்பு நிர்வாகிகள் டேவிட் மற்றும் அனிதா கூறியதாவது:
பின்னலாடை தொழில் சரிந்துவிட்டதாக கூறுவது தவறானது; தொழில் வாய்ப்புகள் நிரம்பியுள்ளன. தேவையான புதிய மாற்றத்தை ஏற்றால், வெற்றி பெறலாம். திருப்பூரை பொறுத்தவரை தற்போதும் வெற்றிப்பாதையில் தான் இயங்கி கொண்டிருக்கிறது. திருப்பூரில் செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், யெஸ் இந்தியா கேன் அமைப்பு செயல்பட்டு வருகிறது. நிப்ட்-டீ கல்லுாரி நிர்வாகிகளுடன், இதுதொடர்பாக கலந்தாய்வு நடத்தியுள்ளோம். செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி தொடர்பாக, விரிவான கலந்தாய்வும், பேஷன் ஷோ நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.யெஸ் இந்தியா கேன் அமைப்பு நிர்வாகிகள் டேவிட், அனிதா உள்ளிட்டோர், நிப்ட் டீ கல்லுாரியின் முதன்மை ஆலோசகர் ராஜா சண்முகத்தை சந்தித்து செயற்கையிழை ஆடை உற்பத்தியை ஊக்குவிப்பது தொடர்பான கருத்துகளை முன்வைத்தனர்.பின்னலாடை தொழில் பின்னடைவா... நம்ப வேண்டாம்!யெஸ் இந்தியா கேன் அமைப்பினர் கூறியதாவது:திருப்பூர் பின்னலாடை தொழில் பின்னடைகிறது என்ற கருத்தை நம்ப வேண்டாம்; செயற்கை ஆடைகளை முன்னிறுத்தினால் வளர்ச்சி கிடைக்கும். தற்போது, பிராண்ட்களிலேயே, செயற்கை நுாலிழை ஆடைகளை அபாரமாக உருவாக்கி, வர்த்தகம் செய்யலாம். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us