UPDATED : செப் 01, 2023 12:00 AM
ADDED : செப் 01, 2023 09:31 AM
அ நிறம் | அளவு
சென்னை:
தமிழகத்தில், ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, கல்லுாரி கல்வி இயக்குனரகம் வழியே, பி.எட்., மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, நேற்று அறிவிக்கப்பட்டது. www.tngasa.in என்ற இணையதளத்தில், இன்று முதல் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். வரும், 11ம் தேதி வரை விண்ணப்ப பதிவுக்கு அவகாசம் தரப்பட்டுள்ளது. கல்லுாரிகள், இடங்கள், மாணவர் சேர்க்கை விதிகள் உள்ளிட்ட விபரங்களை, மேற்கண்ட இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
