தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லுாரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி

கல்லுாரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி

கல்லுாரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி


UPDATED : செப் 02, 2023 12:00 AM

ADDED : செப் 02, 2023 10:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2023 12:00 AM ADDED : செப் 02, 2023 10:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:
அண்ணாத்துரை பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சி துறை சார்பில்கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி செப்., 15 அன்று சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரியில் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:
இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, உதவி பெறும், தனியார் கல்லுாரி, மருத்துவ, பொறியியல், ஆசிரியர் பயிற்சி, நர்சிங் கல்லுாரி மாணவர்களுக்கென மாவட்ட அளவிலான பேச்சு போட்டி சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரியில் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000 இரண்டாம் பரிசு ரூ.3,000 மூன்றாம் பரிசு ரூ.2,000 மற்றும் பாராட்டு சான்று வழங்கப்படும். அன்று காலை 9:30 மணிக்கு போட்டிதுவங்கும்.சிவகங்கை மாவட்ட கல்லுாரிகளில் படிக்கும் கல்லுாரிக்கு தலா 2 மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டி தலைப்புகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அத்தலைப்பில் மட்டுமே பேச வேண்டும். பங்கேற்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பத்தை தயார் செய்து,கல்லுாரி முதல்வரின் பரிந்துரை கையெழுத்துடன் போட்டியன்று தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனரிடம் ஒப்படைக்கவும்.கடந்த ஆண்டு பங்கேற்று பரிசு பெற்றவர்கள், இப்போட்டியில் பங்கேற்க முடியாது. விபரத்திற்கு சிவகங்கை உதவி இயக்குனர், தமிழ் வளர்ச்சி துறையில் நேரடியாகவோ அலைபேசி எண் 99522 80798ல் கேட்டு அறியலாம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us