தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர் போலீஸ் மார்ஷல்கள் குழு

மாணவர் போலீஸ் மார்ஷல்கள் குழு

மாணவர் போலீஸ் மார்ஷல்கள் குழு


UPDATED : செப் 02, 2023 12:00 AM

ADDED : செப் 02, 2023 05:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2023 12:00 AM ADDED : செப் 02, 2023 05:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
பெங்களூரில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பழக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர, ஒவ்வொரு கல்லுாரியிலும், 50 மாணவர்களை போலீஸ் மார்ஷல்களாக நியமிக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில், போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. போதைப் பொருள் கடத்தியதாக, உள்நாடு, வெளிநாட்டினர் வாரந்தோறும் கைது செய்யப்படுகின்றனர். நேற்றும் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,400 போதை மாத்திரைகளை ஹூலிமாவு போலீசார் கைப்பற்றி, ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவைச் சேர்ந்த இருவரைக் கைது செய்தனர்.நகரில் போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்க, போலீசார், மாணவர் போலீஸ் மார்ஷல் என்ற குழுவை அமைக்க உள்ளனர். இதற்காக, ஒவ்வொரு கல்லுாரியிலும் 50 மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களை மாணவர் மார்ஷல்களாக நியமிக்க காவல் துறை திட்டமிட்டுள்ளது. இவர்கள் கல்லுாரியைச் சுற்றி போதைப் பொருள் விற்கப்பட்டாலோ அல்லது உட்கொள்வதைக் கண்டாலோ போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.மேலும் போதைப் பொருள் உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி, தங்கள் வகுப்புத் தோழர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது இவர்களின் பணி. நகரின் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியிலும், 700 மாணவர் போலீஸ் மார்ஷல்கள் நியமிக்கப்படுவர். ஏற்கெனவே, எலஹங்காவில் 45 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 700 மாணவர்கள் &'போலீஸ் மார்ஷல்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us