தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டாடா நிறுவனத்துடன் தொழில்நுட்ப பயிற்சி

டாடா நிறுவனத்துடன் தொழில்நுட்ப பயிற்சி

டாடா நிறுவனத்துடன் தொழில்நுட்ப பயிற்சி


UPDATED : செப் 08, 2023 12:00 AM

ADDED : செப் 08, 2023 10:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 08, 2023 12:00 AM ADDED : செப் 08, 2023 10:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், தற்போது நேரடி சேர்க்கை நடக்கிறது. இங்கு, ஓராண்டு மற்றும் இரண்டு ஆண்டுகள் பயிலும் சிவில் இன்ஜினியரிங் அசிஸ்டன்ட், டிராப்ட் ஸ்மேன் சிவில் டிராப்ட்ஸ்மேன் மெக்கானிக்கல், கட்டட வரைவாளர், இயந்திரப்பட வரைவாளர் உள்ளிட்ட பல்வேறு தொழில் பிரிவுகள் உள்ளன.பத்தாம் வகுப்பு, பிளஸ் - 2 மற்றும் டிப்ளமா அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் பயிற்சியில் சேரலாம். மேலும், தமிழக அரசு மற்றும் டாடா டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து, உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஓராண்டு மற்றும் இரண்டு ஆண்டுகள் தொழில் பிரிவுகளில் சேர்க்கை நடக்கிறது. இதில் எலக்ட்ரிக் வாகன மெக்கானிக், இண்டஸ்ட்ரியல் ரோபோடிக் மற்றும் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீஷியன் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.அதேபோல், இரண்டு ஆண்டுகள் மெக்கானிக்கல் துறையில் அடிப்படை வடிவமைப்பாளர் மற்றும் மெய்நிகர் சரிபார்ப்பு, அட்வான்ஸ் சி.என்.சி., இயந்திர தொழில்நுட்ப வல்லுனர் உள்ளிட்ட பயிற்சிகளும் உள்ளன. பயிற்சி முடிந்தவுடன், வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். பயிற்சிக்கு கட்டணம் கிடையாது; நிலைய வளாகத்தில் தங்கி பயில வசதி உண்டு. பயிற்சியில் சேர விரும்புவோர், இம்மாதம் 23ம் தேதிக்குள், தங்கசாலை மிண்ட் பகுதியில் உள்ள வடசென்னை அரசின் ஐ.டி.ஐ.,யில் அணுகலாம். மேலும் விபரங்களுக்கு, 044 - -2520 9268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us