தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெளிநாட்டில் வேலைவாய்ப்புக்கான சிறப்பு முகாம்

வெளிநாட்டில் வேலைவாய்ப்புக்கான சிறப்பு முகாம்

வெளிநாட்டில் வேலைவாய்ப்புக்கான சிறப்பு முகாம்


UPDATED : ஜன 18, 2010 12:00 AM

ADDED : ஜன 18, 2010 05:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 18, 2010 12:00 AM ADDED : ஜன 18, 2010 05:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை : வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பெயர் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம், திருச்சி மற்றும் சேலத்தில் நடக்கிறது.


தமிழக அரசின், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் முதன்மைச் செயலர் குத்சியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்த நபர்களுக்கு, வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. இதற்காக பெயர் பதிவு செய்ய பலரும் சென்னையிலுள்ள அலுவலகத்திற்கு வருவதால் நேர விரயம், பயணச் செலவு ஏற்படுகிறது. இதை தவிர்க்க, மாவட்டங்கள் தோறும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான பெயர் பதிவு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.


இம்முகாம், திருச்சியிலுள்ள மன்னார்புரம் முதல் தெருவிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 23, 24ம் தேதிகளில் காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை நடக்கிறது. மேலும் சேலம், ரயில்வே ஸ்டேஷன் பின்புறம், சின்னையா தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 30, 31ம் தேதி இம்முகாம் நடக்கிறது.


இந்த முகாம்களில் தங்களது பெயரை பதிவு செய்ய விரும்பும் பயனாளிகள் கல்வித்தகுதி சான்றுகள், பாஸ்போர்ட்டின் மூன்று நகல்கள், நான்கு பாஸ்போர்ட் அளவு போட்டோக்கள் கொண்டு வர வேண்டும். பாஸ்போர்ட் இல்லாதவர்கள், கல்வி அல்லது தொழில் மற்றும் தொழில் அனுபவம் இல்லாதவர்களும் பங்கேற்கலாம். லேபர், கொத்தனார், கார்பென்டர், ஸ்டீல் பிட்டர், பிளம்பர், பெயின்டர், ஐ.டி.ஐ., டிப்ளமோ, தொழில் அனுபவம் பெற்றவர்கள், ஓட்டல் பணியாளர்கள், பட்டப்படிப்பு முடித்தவர்கள் பெயர் பதிவு கட்டணமாக 442 ரூபாய் செலுத்த வேண்டும்.


நர்ஸ், பாராமெடிக்கல் டெக்னீசியன்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், இன்ஜினியரிங், முதல் நிலை இன்ஜினியரிங், முதுநிலை கணக்கர், முதுநிலை பட்டதாரிகள், முதுநிலை மேலாண்மை, கம்ப்யூட்டர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் 772 ரூபாயும், டாக்டர்கள் 995 ரூபாயும் செலுத்தி பெயர் பதிவு செய்யலாம். இது குறித்த விவரங்களை 94446 90026, 93818 00181, 99402 76356 என்ற எண்களை தொடர்பு கொண்டு பெறலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us