தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி அறிவியல் கண்காட்சி துவக்கம்

பள்ளி அறிவியல் கண்காட்சி துவக்கம்

பள்ளி அறிவியல் கண்காட்சி துவக்கம்


UPDATED : ஜன 23, 2010 12:00 AM

ADDED : ஜன 23, 2010 03:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 23, 2010 12:00 AM ADDED : ஜன 23, 2010 03:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மூன்று நாள் அறிவியல், கலை மற்றும் கைத்திறன் கண்காட்சி நேற்று (ஜன. 22) துவங்கியது.


மடிப்பாக்கம் மற்றும் நங்கநல்லூர் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் இணைந்து நடத்தும் 10வது, அறிவியல், கலை மற்றும் கைத் திறன் கண்காட்சி, மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று துவங்கியது. பள்ளியின் முதல்வர் மற்றும் தலைவர் வாசுதேவன் வரவேற்றார்.


மாநில மனித உரிமை கமிஷனின் உறுப்பினர் பரமசிவம் பேசுகையில், ‘பிரின்ஸ் மெட்ரிக் பள்ளி, மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கி வருகிறது. இப்பள்ளி தொடர்ந்து கல்விப் பணியை செய்யவேண்டும். இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிறந்த கல்வி பெற்று, நல்ல நிலைக்கு வருகின்றனர். இந்த கண்காட்சியை மற்ற பள்ளிகளின் மாணவ, மாணவியரும், பெற்றோரும் பார்த்து பாராட்ட வேண்டும்’ என்றார்.


கண்காட்சியை துவக்கிவைத்த சபாநாயகர் ஆவுடையப்பன் பேசுகையில், ‘இப்பள்ளி குழுமத்தில் ஏழாயிரம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். மாவட்ட மற்றும் மாநில அளவில் சிறந்த பள்ளி என சான்றிதழ் கொடுக்கும் அளவிற்கு இப்பள்ளி விளங்குகிறது’ என்றார்.


முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியலிங்கம், ஆலந்தூர் நகராட்சி முன்னாள் தலைவர் ஆர்.எஸ்.பாரதி, மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் இதில் கலந்து கொண்டனர். கண்காட்சியை முன்னிட்டு, முன்னதாக மாணவ, மாணவியரின் பேரணி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் மற்றும் தலைவர் வாசுதேவன் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us