தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தைரியமிக்க பெற்றோரே நாட்டிற்கு தேவை

தைரியமிக்க பெற்றோரே நாட்டிற்கு தேவை

தைரியமிக்க பெற்றோரே நாட்டிற்கு தேவை


UPDATED : ஜன 25, 2010 12:00 AM

ADDED : ஜன 25, 2010 10:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 25, 2010 12:00 AM ADDED : ஜன 25, 2010 10:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே தெக்குப்பாளையம் ஏ.வி.பி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில், சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:

நம் கண்முன் நடக்கும், நல்ல விஷயங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதிலிருந்து, படிப்பினை கற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைகளை பெற்றோர், தைரியமிக்கவர்களாக, அறிவாளிகளாக வளர்க்க வேண்டும். அவர்களுடைய பணிகளை, அவர்களே செய்யத் தூண்ட வேண்டும்.  விரும்பியது கிடைப்பதுதான் வெற்றி. வெற்றி பெற்றவனை அங்கீகரிப்பதும், தோல்வி அடைந்தவனை வெற்றி பெற தூண்டுவதும் முன்னேற்றத்தின் முக்கிய செயல்கள். கிடைத்ததை விரும்ப கற்றுக் கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் முன்னேற ஏராளமான துறைகள் உள்ளன. எல்லோரும் இன்ஜினியர்களாக, மருத்துவர்களாக மாறினால், பணிச்சமநிலை ஏற்படாது. நல்ல ஆசிரியர்களாக, விஞ்ஞானியாக,சிறந்த தொழிலதிபராக, சிறந்த நிர்வாகியாக வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்க வேண்டும். மாதா, பிதா, குருவை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். 2020-ல் இந்தியா வல்லரசாக மாற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

தஞ்சை தமிழ் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் சுப்பிரமணியம் பேசுகையில், வாழ்க்கையில் எவ்வளவு முன்னேறியிருந்தாலும், எந்நாட்டில் வசித்தாலும் நம் தாய்நாட்டையும், நமது பெற்றோரை மறக்கக் கூடாது என்றார்.
மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் இளங்கோ பேசுகையில், நாட்டின் பழம் பெருமைகளை நிலைநாட்ட அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், பள்ளி செயலர் வெங்கடேஷ்வரன், நிர்வாக இயக்குனர் முத்துகுமார், முதல்வர் சந்திரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இயக்குனர் குணசேகரன் நன்றி கூறினார். விழாவையொட்டி, பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us