UPDATED : அக் 28, 2023 12:00 AM
ADDED : அக் 28, 2023 08:06 AM
சண்டிகர்:
சண்டிகர் பல்கலையின் ஒன்பது படிப்புகளை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு சர்வதேச அங்கீகாரம் வழங்கும் ஏ.பி.இ.டி., அமைப்பு அங்கீகரித்து உள்ளது.பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் அமைந்துள்ள சண்டிகர் பல்கலையில், பொறியியல், கலை அறிவியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை வழங்குகிறது. இந்த பல்கலையின் சிவில், கணினி அறிவியல், மின்னணுவியல், இயந்திரவியல் உள்ளிட்ட ஒன்பது பொறியியல் படிப்புகளுக்கு, அமெரிக்காவை மையமாக வைத்து செயல்படும் அமைப்பான ஏ.பி.இ.டி.,யின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.இதன் வாயிலாக நம் நாட்டில் அதிக அதிக படிப்புகளுக்கு ஏ.பி.டி.யி.,யின் அங்கீகாரம் பெற்ற தனியார் பல்கலை என்ற பெயர், சண்டிகர் பல்கலைக்கு கிடைத்துள்ளது.இது தொடர்பாக சண்டிகர் பல்கலையின் வேந்தர் சத்னம் சிங் சந்து கூறியதாவது:
கற்பித்தல், கற்றல் மற்றும் உயர்கல்வி ஆராய்ச்சியில் பல்கலை சிறந்து விளங்கியதன் அடையாளமாக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன் வாயிலாக, பட்டம்பெறும் மாணவர்கள் வேலைவாய்ப்புக்கான தகுதிகளை பூர்த்தி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
