UPDATED : நவ 04, 2023 12:00 AM
ADDED : நவ 04, 2023 04:24 PM
அ நிறம் | அளவு
கோவை:
கோவை சரவணம்பட்டி, கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், கால்நடை வளர்ப்பு இலவச பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, வரும் 9ம் தேதி கறவைமாடு வளர்ப்பு, 28ம் தேதி வெள்ளாடு வளர்ப்பு பயிற்சிகள் நடக்கவுள்ளன. இதில், வளர்ப்பு முறை, நோய் மேலாண்மை, விற்பனை வாய்ப்பு, சந்தை நிலவரம் உள்ளிட்ட அனைத்து விபரங்கள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.பயிற்சிகள், காலை 10:30 முதல் மாலை, 5:00 மணி வரை நடைபெறும். மேலும் விபரங்களுக்கு, 0422-2669965 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
