தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சாதனை பெண்களுக்கு விருதுக்கு விண்ணப்பம்

சாதனை பெண்களுக்கு விருதுக்கு விண்ணப்பம்

சாதனை பெண்களுக்கு விருதுக்கு விண்ணப்பம்


UPDATED : நவ 09, 2023 12:00 AM

ADDED : நவ 09, 2023 10:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2023 12:00 AM ADDED : நவ 09, 2023 10:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:
வீரதீர செயல்புரிந்த பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை தின விருதும், ரூ.1 லட்சம்ரொக்க பரிசும் வழங்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:
2024 ஜன., 24 தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. மாவட்ட அளவில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், 18 வயது வரை கல்வி கற்பதை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணத்தை தடுக்க பாடுபட்டு வீரதீர செயல்புரிந்த வயது 18 க்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை தின விருதுக்கான பாராட்டு பத்திரம், ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளது.இந்த விருதுக்கு தகுதியுள்ள வயது 13 முதல் 18க்கு உட்பட்ட தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பெண் குழந்தைகள், நவ.,20 அன்று மாலை 5:00 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த விருதுக்கு விண்ணப்பிப்போர், பிற பெண் குழந்தைகள் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணம் தடுத்தல் மற்றும் தவிர்த்தல் போன்ற சிறப்பான செயல்களை செய்தவர்கள், பெண்களுக்கு எதிரான சமூக அவலம், மூடநம்பிக்கைக்கு தீர்வு காணும் விதத்தில் ஓவியம், கவிதை, கட்டுரைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்ற செயல்களை பெண்களும் சாதிக்க முடியும் என சாதித்து வீர, தீர செயல் புரிந்த பெண்களுக்கு இந்த விருது வழங்கப்படும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us