தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சைனிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

சைனிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

சைனிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை


UPDATED : நவ 10, 2023 12:00 AM

ADDED : நவ 11, 2023 04:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2023 12:00 AM ADDED : நவ 11, 2023 04:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்திய பாதுகாப்பு துறை சார்பில், நாடு முழுதும், 33 இடங்களில், சைனிக் பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய கடற்படை அகாடமி ஆகியவற்றில், ராணுவ படிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.இந்த பள்ளிகளில், 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு சேர்க்கைக்கு, தேசிய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. வரும் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்கு, ஜன., 21ல் தேர்வு நடத்தப்படும் என, தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.நாடு முழுதும், 186 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த தேர்வுக்கு, https://exams.nta.ac.in/AISSEE/ என்ற இணையதளத்தில், டிச.,16 வரை, ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். கூடுதல் விபரங்களை மேற்கண்ட இணையதளத்திலும், http://www.nta.ac.in/ என்ற தேசிய தேர்வு முகமை இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us