தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாரதியார் தின விளையாட்டு போட்டி

பாரதியார் தின விளையாட்டு போட்டி

பாரதியார் தின விளையாட்டு போட்டி


UPDATED : நவ 11, 2023 12:00 AM

ADDED : நவ 11, 2023 10:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2023 12:00 AM ADDED : நவ 11, 2023 10:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: பள்ளிக்கல்வித்துறையின் மாநில அளவிலான குழு விளையாட்டு போட்டியில் மாணவர்கள் தங்களின் முழுத்திறமையையும் வெளிப்படுத்தினர்.மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான 39வது பாரதியார் தின குழு விளையாட்டு போட்டிகள் கோவையில் நடக்கின்றன. மாணவ - மாணவியருக்கு கால்பந்து, கபடி, கோ கோ, த்ரோபால், ஹேண்ட்பால், ஹாக்கி, டேபிள் டென்னிஸ், லான் டென்னிஸ், கூடைப்பந்து, வாலிபால் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில், 40 அணிகள் பங்கேற்றன.*கே.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த கபடி இறுதிப்போட்டியில், தேனி எஸ்.டி.ஏ.டி., அணி 20 - 18 என்ற புள்ளிக்கணக்கில் திருநெல்வேலி அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.*ராமகிருஷ்ணா கல்லுாரியில் நடந்த பூப்பந்து இறுதிப்போட்டியில் மயிலாடுதுறை மாவட்ட அணி 2 - 0 என்ற செட் கணக்கில் திருச்சி அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.*ஆதித்யா குளோபல் பள்ளி மைதானத்தில் நடந்த த்ரோபால் இறுதிப்போட்டியில் கோவை மாவட்ட அணி 2 -0 என்ற செட் கணக்கில் திருப்பூர் அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.*கற்பகம் பல்கலையில் நடந்த ஹேண்ட்பால் இறுதிப்போட்டியில், விருதுநகர் அணி 23 - 21 என்ற கோல் கணக்கில் கிருஷ்ணகிரி எஸ்.டி.ஏ.டி., அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.*பி.எஸ்.ஜி., டெக் உள்விளையாட்டு அரங்கில் நடந்த கூடைப்பந்து இறுதிப்போட்டியில் தஞ்சாவூர் மாவட்ட அணி 63 - 38 என்ற புள்ளிக்கணக்கில் தேனி மாவட்ட அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.*ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியில் நடந்த ஹாக்கி இறுதிப்போட்டியில், திருநெல்வேலி எஸ்.டி.ஏ.டி., அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் மதுரை எஸ்.டி.ஏ.டி., அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.*கற்பகம் பல்கலையில் நடந்த வாலிபால் இறுதிப்போட்டியில் திருநெல்வேலி எஸ்.டி.ஏ.டி., அணி 3 - 0 என்ற செட் கணக்கில் கோவை எஸ்.டி.ஏ.டி., அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us